இந்த தகுதிகள் உங்களிடம் இருந்தால் போதும்.. நீங்களே பெட்ரோல் பங்க் அமைக்கலாம்!

பெட்ரோல் பங்க்குகள் அமைக்க ரூ.65 லட்சம் முதல் ரூ.80 லட்சம்

பெட்ரோல் பங்க்குகள் அமைக்க ரூ.65 லட்சம் முதல் ரூ.80 லட்சம்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
பெட்ரோல் பங்க்

பெட்ரோல் பங்க்

தமிழகத்தில் பெட்ரோல் பங்குகள் அமைக்க விருப்பமுள்ளவர்கள் விண்ணபிக்கலாம் என்று இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இந்தியன் ஆயில்:

Advertisment

தமிழகத்தில் 5,125 மற்றும் புதுச்சேரியில் 132 என மொத்தம் 5 ஆயிரத்து 257 பெட்ரோல் விற்பனை நிலையங்கள் புதிதாக திறக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதற்கான டீலர்களை நியமிக்க எண்ணெய் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன.

பெட்ரோல் விற்பனை நிலையம் தொடங்க விண்ணப்பிக்க புதிய வழிகாட்டி கையேடு வெளியிடப்பட்டுள்ளது. இதில் ஆன்-லைன் மூலம் விண்ணப்பிப்பதற்கான எளிதான விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன.

அதற்காக விண்ணப்ப படிவம் மற்றும் ஆவணத்தை சமர்ப்பிக்கும் முறை எளிதாக்கப்பட்டுள்ளது. விதிகளும் தளர்த்தப்பட்டுள்ள.இந்தியாவிலேயே முதல்முறையாக இந்த முறை மூன்று நிறுவனங்கள் இணைந்து ஒரே இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.

தேவையான தகுதிகள்:

Advertisment
Advertisements

1.பெட்ரோல் நிலையம் அமைக்க நிலம் இருப்பவர்களும், நிலம் இல்லாதவர்களும் விண்ணப்பிக்கலாம்.

2.ஆனால் அதிகாரிகள் கேட்கும்போது, பெட்ரோல் நிலையம் அமைக்க நிலம் ஏற்பாடு செய்திருக்க வேண்டும்.

3. முதன்முறையாக வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யும் விதத்தில் தனிப்பட்ட ஏஜென்சி மூலமாக கணினிமயமாக்கப்பட்ட குலுக்கல் முறை, ஒப்பந்த புள்ளி திறப்பு முறைகள் செயல்படுத்தப்படுகிறது.

4. இதுகுறித்த கூடுதல் விவரங்களுக்கு www.petrolpumpdealerchayan.in என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

5. விண்ணப்பதாரர்கள் 10ம் வகுப்பு படித்தவர்களாக இருக்க வேண்டும். 21 வயது பூர்த்தியடைந்து 60 வயதுக்குள்ளானவர்களாக இருக்க வேண்டும்.

6.  இதில் முன்னாள் ராணுவத்தினருக்கு விதிவிலக்கு. மேலும் ராணுவ வீரர்கள், சுதந்திர போராட்ட தியாகிகள், விளையாட்டு வீரர்கள், ஊனமுற்றோர்கள் என பல்வேறு பிரிவினருக்கு இடஒதுக்கீடு அளிக்கப்பட்டுள்ளது.

7. மேலும் தகுதி விவரங்களை இணையதளத்தை பார்த்து தெரிந்து கொள்ளலாம். 24.12.2018 விண்ணபிக்க கடைசி நாளாகும்.

செலவு:

1. நகர்ப்புறங்களில் பெட்ரோல் பங்க்குகள் அமைக்க ரூ.65 லட்சம் முதல் ரூ.80 லட்சம் வரையிலும் கிராமப் பகுதிகளில் அமைக்க ரூ.35 லட்சம் முதல் ரூ.40 லட்சம் வரை செலவா கும்.

2. இந்த புதிய பங்க்குகள் நெடுஞ்சாலை பகுதிகள், வயல் வெளிகள் மற்றும் தொழிற்சாலை கள் அமைந்துள்ள பகுதிகளில் அமைக்கப்படும்.

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: