மருத்துவப் படிப்பிற்கான இளங்கலை நீட் நுழைவுத் தேர்வை (NEET-UG) கணினி அடிப்படையிலான தேர்வாக CBT) மாற வாய்ப்புள்ளதாக மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார்.
TOI இதுகுறித்து செய்தி வெளியிட்டுள்ளது. தர்மேந்திர பிரதான் பேசுகையில், சுகாதார அமைச்சகம் மற்றும் தேர்வு முகமை (NTA) மற்றும் முன்னாள் இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின் (இஸ்ரோ) தலைவர் கே. ராதாகிருஷ்ணன் தலைமையில் புதிதாக உருவாக்கப்பட்ட மூன்றாம் தரப்பு கண்காணிப்புக் குழு உடனான ஆலோசனைக்குப் பின் ஒருமித்த கருத்து வந்துள்ளதாக கூறினார்.
நீட் தேர்வு கேள்வித்தாள் கசிவு புகார்களை ஆய்வு செய்யும் வகையில் அமைக்கப்பட்ட ராதாகிருஷ்ணன் கமிட்டி, மாற்றத்தக்க பரிந்துரைகளை முன்மொழிந்துள்ளது. அவற்றில் முக்கியமானது, காகித அடிப்படையிலான தேர்வுகளுடன் தொடர்புடைய பாதுகாப்பு அபாயங்களைக் குறைக்க ஆன்லைன் வழி தேர்வு ஒரு சிறந்த மாற்றமாகும் என்றார்.
ராதாகிருஷ்ணன் குழு அறிக்கையை நடைமுறைப்படுத்தத் தொடங்கினோம். ஒரு கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. இது என்.டி.ஏ-வுக்கு தொடர்ந்து ஆலோசனை வழங்கி கண்காணிக்கும். இது மூன்றாம் தரப்பு கண்காணிப்பு குழுவாக செயல்படும் என்று தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“