Advertisment

புதுச்சேரி பல்கலை.யில் 150 பாடப் பிரிவுகளுக்கு இடஒதுக்கீடு உண்டா? மத்திய அமைச்சர் பதில் என்ன?

புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் 150 பாடப்பிரிவுகளுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறதா? காங்கிரஸ் எம்.பி கேள்விக்கு மத்திய அமைச்சர் பதில் என்ன?

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Pondicherry University

புதுவை பல்கலைக்கழகம்

புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் 150 பாடப்பிரிவுகளில் புதுச்சேரி மாணவர்களுக்கு இன்று வரை இட ஒதுக்கீடு வழங்கப்படவில்லை என பாராளுமன்றத்தில் புதுச்சேரி காங்கிரஸ் எம்.பி வைத்திலிங்கம் கேள்வி எழுப்பியதற்கு மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் அளித்த பதில் இங்கே.

Advertisment

காங்கிரஸ் கட்சியின் புதுச்சேரி பாராளுமன்ற மக்களவை உறுப்பினர் வெ. வைத்திலிங்கம் நடைபெற்று வரும் பாராளுமன்ற கூட்டத் தொடரில் 07.08.2023 அன்று புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகம் ஆரம்பித்தது முதல் 2013 ஆம் ஆண்டு வரையில் இருந்த 21 பாடப்பிரிவுகளில் மட்டும் புதுச்சேரி மாணவர்களுக்கு 25 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படுவதையும், 2013ம் ஆண்டிற்குப் பின்னர் தொடங்கப்பட்ட சுமார் 150 பாடப்பிரிவுகளில் புதுச்சேரி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படவில்லை என்பதையும் அரசு அறியுமா? என நாடாளுமன்ற கூட்டத்தொடரில் கேள்வி எழுப்பினார்.

இதையும் படியுங்கள்: JAM 2024; விண்ணப்பப் பதிவு எப்போது? ஐ.ஐ.டி மெட்ராஸ் அறிவிப்பு

மேலும், புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் அனைத்து பாடப்பிரிவுகளிலும் இட ஒதுக்கீடு கேட்டு மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்திடம் 2013-இல் சமர்ப்பித்த முன்மொழிவு இன்னும் மத்திய அரசின் ஒப்புதலுக்காகக் காத்திருக்கிறது என்பதும் அரசுக்குத் தெரியுமா? மற்றும் அப்படியானால், அதன் விவரங்கள் என்ன? என்றும் எம்.பி வைத்திலிங்கம் கேள்வி எழுப்பினார்.

இதற்கு மத்திய கல்வி துறை இணை அமைச்சர்  சுபாஷ் சர்கார் அளித்துள்ள பதிலில் கூறியிருப்பதாவது;

மத்திய பல்கலைக்கழங்களின் சட்ட விதிமுறைகளின் படி குடியிருப்பு அடிப்படையிலான இட ஒதுக்கீடு வழங்க இயலாது. மத்திய பல்கலைக்கழகங்கள் அனைத்தும் மத்திய கல்வி நிறுவனங்கள் (சேர்க்கையில் இடஒதுக்கீடு) சட்டம், 2006 மூலம் அவ்வப்போது திருத்தப்பட்டு நிர்வகிக்கப்படுகின்றன. இன்றுவரை அமைச்சகத்தில் புதுச்சேரி பல்கலைக்கழகத்திலிருந்து 25 சதவீத இட ஒதுக்கீடு கேட்ட எந்த முன்மொழிவும் நிலுவையில் இல்லை. இவ்வாறு அமைச்சர் தனது பதிலில் கூறியுள்ளார்.

மேலும் இந்த பதிலுடன் பல்கலைக்கழகத்திலிருந்து பெறப்பட்ட கீழ்கண்ட விளக்கமும் இணைக்கப்பட்டுள்ளது.

அந்த இணைப்பில் கூறப்பட்டுள்ளதாவது, பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தை பொறுத்தவரை 21 பாடப்பிரிவுகளின் 25 சதவிகிதம் புதுச்சேரி மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்டு வழங்கப்பட்டு வருகின்றது. அதேபோல MBA (Business Administration)-வை பொருத்தவரை புதுச்சேரி மாணவர்களுக்கு 20% வழங்கப்பட்டு வருகிறது.

MCA, M.Sc (Computer Science) & M.Com (Business Finance) ஆகிய பாட பிரிவுகள் பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தை சார்ந்த புதுச்சேரி வளாக கல்லூரிகள் மற்றும் காரைக்காலில் உள்ள கிளை வளாகத்திலும் பயிற்றுவிக்கபடுகிறது. இந்த பாட பிரிவுகளை பொறுத்தவரை 25 சதவிகித இட ஒதுக்கீடு புதுச்சேரி மாணவர்களுக்கு அந்தந்த பிராந்திய அடிப்படையில் வழங்கப்படுகின்றது. புதுச்சேரியை சார்ந்த பத்து மாணவர்கள் மெரிட் அடிப்படையில் M.Sc (Bio Technology)-இல் அனுமதிக்கப்படுகின்றார்கள்.

இதற்குப் பின்னர் ஆரம்பிக்கப்பட்ட 36 முதுநிலை பாடப்பிரிவுகளிலும் 10 ஒருங்கிணைந்த (integrated) பாடப்பிரிவுகளிலும், இரண்டு முதல் நிலை பட்டய படிப்புகளுக்கும் புதுச்சேரியை சார்ந்த மாணவர்களுக்கு தனி ஒதுக்கீடு செய்யப்படவில்லை என்று கூறப்பட்டுள்ளது.

மேலும் மத்திய கல்வித் துறையைப் பொறுத்தவரை பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் இருந்து 2013 ஆம் ஆண்டு எந்த முன்மொழிவும் பெறப்படவில்லை. ஆனால் 15.10.2021 அன்று புதுச்சேரி மாநில முதலமைச்சரிடம் இருந்து இது சம்பந்தமாக ஒரு கடிதம் பெறப்பட்டு அந்த கடிதத்திற்கும் மத்திய கல்வித்துறை அமைச்சரிடம் இருந்து 11.01.2022 அன்று பதில் கடிதமும் அனுப்பப்பட்டு விட்டது. இவ்வாறு எழுத்துப்பூர்வமாக மத்திய கல்வித்துறை அமைச்சர் பதில் அளித்துள்ளார்.

பாபு ராஜேந்திரன், புதுச்சேரி

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Education Puducherry Central Government
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment