காங்கிரஸ் எம்.பி, கார்த்தி சிதம்பரம், வரவிருக்கும் ஆண்டில் ஒரு முறை நடவடிக்கையாக ஜே.இ.இ முதன்மை (JEE Mains 2023) தேர்வுக்கான தகுதி அளவுகோல்களை தளர்த்துமாறு அதிகாரிகளை வலியுறுத்தியுள்ளார்.
பொறியியல் படிப்புகளில் சேர்வதற்கான நுழைவுத் தேர்வான ஜே.இ.இ தேர்வில் தொழில்நுட்பக் கோளாறால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு உதவுமாறு மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் கடிதம் எழுதியுள்ளார்.
இதையும் படியுங்கள்: JEE 2023: சேர்க்கை அளவுகோல்களில் மீண்டும் பிளஸ் 2 மதிப்பெண்களை சேர்க்க ஐ.ஐ.டி.,கள் முடிவு
"2022 ஆம் ஆண்டு கூட்டு நுழைவுத் தேர்வின் (JEE) முதன்மைத் தேர்வு மற்றும் அட்வான்ஸ்டு தேர்வில் கலந்து கொண்ட மாணவர்கள் எழுப்பிய கவலைகளை உங்கள் கவனத்திற்குக் கொண்டு வர விரும்புகிறேன். இந்த மாணவர்கள் இந்தியாவின் முன்னணி பொறியியல் நிறுவனங்களில் சேர்க்கை பெற கடுமையாகப் படித்தனர், ஆனால், இருப்பினும், அவர்களின் கட்டுப்பாட்டில் இல்லாத பல தடைகள், தேர்வில் அவர்களுக்கு நியாயமான வாய்ப்பை மறுத்தன, ”என்று தர்மேந்திர பிரதானுக்கு எழுதிய கடிதத்தில் கார்த்தி சிதம்பரம் கூறியுள்ளார்.
குறுஞ்செய்தி அல்லது தபால் மூலம் எவ்வித முன்னறிவிப்பும் இன்றி, கடைசி நேரத்தில் தேர்வு மையங்கள் மாற்றப்பட்டமையால் பல மாணவர்கள் தேர்வு எழுத இயலவில்லை என்று கார்த்தி சிதம்பரம் தெரிவித்தார்.
2020 ஆம் ஆண்டில் 12 ஆம் வகுப்புத் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு, இந்த ஆண்டு JEE மெயின்ஸ் மற்றும் அட்வான்ஸ்டு தேர்வு கடைசி முயற்சி என்பதால், கார்த்தி சிதம்பரம் அவர்கள் சார்பாக அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார். தர்மேந்திர பிரதானிடம் ஒரு முறை நடவடிக்கையாக தகுதி அளவுகோல்களை தளர்த்தி, இந்த மாணவர்களை 2023 இல் மீண்டும் தேர்வெழுத அனுமதிக்குமாறு கார்த்தி சிதம்பரம் கேட்டுக் கொண்டார்.
தேசிய தேர்வு முகமை (NTA) JEE Main மற்றும் Advanced 2023க்கான தேர்வு அட்டவணையை இன்னும் வெளியிடவில்லை. இருப்பினும், அதிகாரப்பூர்வ இணையதளமான nta.ac.in இல் அட்டவணை விரைவில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil