CISF constable recruitment 2019: மத்திய தொழில்துறை பாதுகாப்பு படை (சிஐஎஸ்எஃப்) 914 கான்ஸ்டபிள் (டிரேட்ஸ்மேன்) பணிக்கான விண்ணப்பங்களை பொதுமக்களிடம் வாங்க ஆரம்பித்துள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு ரூ .21,700 முதல் ரூ .69,100 வரை ஊதியம் கிடைக்கும். விண்ணப்ப செயல்முறை செப்டம்பர் 23 காலை 10 மணி முதல் cisf.gov.in இல் தொடங்கியது.
இப்பணிக்கான அதிகாரப் பூர்வ அறிவிப்பை cisf.gov.in அல்லது cisfrectt.in போன்ற அதன் அதிகாரப் பூர்வ இணைய தளங்களில் பெற்றுக் கொள்ளலாம்.
தேர்வர்களின் முக்கிய கவனத்திற்கு, இப்பணிக்கான ஆன்லைன் பதிவு நிறுத்தப்பட்டுவிட்டன.ஏன்…. என்ற காரணத்தை இன்னும் மத்திய தொழில்துறை பாதுகாப்பு படை விளக்கவில்லை.
cisfrectt.in என்ற அதன் இனியதளத்திற்குச் சென்று, Recruitment of constable/tradesmen in cisf-2019 என்ற லிங்கை கிளிக் செய்யுங்கள். ஒரு பிடிஎப் ஒன்று உங்கள் திரையில் தோன்றும். அந்த பிடிஎப் பைலை பிரிண்ட்அவுட் எடுத்து, அதில் பக்கம் 26 லுள்ள அப்பெண்டிக்ஸ் A வில் கேட்டகப்படும் தகவலை பூர்த்தி செய்து, சமதப்பட்ட அதிகாரிகளுக்கு வரும் அக்டோபர் 22 க்குள் அனுப்பி வையுங்கள்.
கல்வி தகுதி: 10 ஆம் வகுப்பு மற்றும் அதற்கு சமமான கல்வியை முடித்தவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.
வயது: விண்ணப்பதாரர் விண்ணப்பிக்க தகுதி பெற குறைந்தபட்சம் 18 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும். உயர் வயது வரம்பு 23 ஆகவும் உள்ளது. இருப்பினும், ஒதுக்கப்பட்ட வகை வேட்பாளர்களுக்கு வயது வரம்பு தளர்த்தப் பட்டுள்ளது.
உத்தியோகபூர்வ அறிவிப்பின்படி, எழுத்துத் தேர்வெழுதும் தேர்வர்கள், உடல் திறன் சோதனை (பி.இ.டி), ஆவண சரிபார்ப்பு மற்றும் மருத்துவ சோதனை ஆகியவற்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் .
எழுத்து தேர்வு மல்டிப்பல் சாய்ஸ் அடிப்படையில் இருக்கும். இதில் தேர்வர்கள் குறைந்தப்பட்சம் 35 சதவீத மதிப்பெண்களைப் பெற வேண்டும் (ஒதுக்கப்பட்ட பிரிவுக்கு 33 சதவீதம்).
மேலும், விவரங்களுக்கு கான்ஸ்டபிள் (டிரேட்ஸ்மேன்) பணி அறிவிப்பு