இஞ்ஜினியரிங் மாணவர்களே – இதோ உங்களுக்கான முக்கிய அறிவிப்பு : மிஸ் பண்ணிறாதீங்க

Anna University : நேரடி தேர்வு அக்டோபர் 28 முதல் நவம்பர் 9 வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

By: Updated: August 7, 2020, 11:07:58 AM

தமிழகத்தில் இஞ்ஜினியரிங் கல்லூரிகளுக்கான ஆன்லைன் வகுப்பு ஆகஸ்ட் 12 முதல் துவங்க உள்ளன. அக்டோபர் 28-ம் தேதி முதல் செமஸ்டர் தேர்வுகள் நடைபெற இருப்பதாக அண்ணா பல்கலைகழகம் அறிவித்துள்ளது.

கொரோனாவினால் தமிழகம் முழுவதும் இஞ்ஜினியரிங் கல்லூரிகள் செயல்படாத நிலையில் ஆன்லைன் வகுப்புகள் மற்றும் செமஸ்டர் தேர்வுகள் குறித்து அண்ணா பல்கலைகழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்புகளின் காரணமாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டதால் செமஸ்டர் தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டன. இந்நிலையில் இறுதி ஆண்டு தேர்வுகள் தவிர்த்து மற்ற தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. இறுதி ஆண்டு தேர்வுகள் முடிவடையாமல் உள்ளதால் மாணவர்கள் பணிக்கு செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் அண்ணா பல்கலைகழகம் வெளியிட்ட அறிவிப்பில் இறுதி ஆண்டு மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வுகள் ஆன்லைன் மூலம் நடத்தவும், அதை எழுத முடியாதவர்களுக்கு ஆகஸ்டுக்கு பிறகு நேரடி தேர்வு நடத்தவும் திட்டமிட்டிருப்பதாக தெரிவித்தது. தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பில் நேரடி தேர்வு அக்டோபர் 28 முதல் நவம்பர் 9 வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சக இஞ்ஜினியரிங் மாணவர்களுக்கு ஆன்லைன் வழி வகுப்புகள் ஆகஸ்டு 12 முதலாக தொடங்குவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Education-jobs News by following us on Twitter and Facebook

Web Title:Corona virus anna university engineering colleges online classes semester exams time table

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X