சிபிஎஸ்இ 10, 12-ம் வகுப்புப் பொதுத் தேர்வுகள் ஜூலை மாதத்தில் நடைபெறுவதாக இருந்தநிலையில், அது ரத்து செய்யப்பட்டுள்ளது. சிறப்பு திட்டத்தின் கீழ், ஜூலை 15ம் தேதிவாக்கில் தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று தி இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகைகக்கு மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளார்.
இந்த சிறப்பு திட்டத்தின் கீழ் அளிக்கப்படும் மதிப்பெண்களில் மாணவர்களுக்கு திருப்தி இல்லாதபட்சத்தில், அவர்களுக்கென்று தனியாக தேர்வு நடத்தப்படும். இந்த தேர்வுக்கான தேதிகள் பிறகு அறிவிக்கப்படும். இந்த தேர்வுகளுக்கு பிறகு, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு என்று தனியாக இம்ப்ரூவ்மெண்ட் தேர்வுகள் நடத்தப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
10 மற்றும் 12ம் வகுப்பில் அனைத்துத்தேர்வுகளும் முடிவுற்ற மாணவர்களுக்கு சிறப்புத்தேர்வு நடத்தப்படமாட்டாது. இந்த தேர்வுகளில் அவர்களின் பெர்பார்மன்ஸ் அடிப்படையில் தேர்வு முடிவுகள் வெளியாகும். நடந்து முடிந்த தேர்வுகளின் விடைத்தாள்கள், ஆசிரியர்கள் ஊரடங்கு காலத்தில் வீட்டிலிருந்தே திருத்தி முடித்துள்ளனர்.
மாணவர்கள், 3 தேர்வுகள் எழுதியிருக்கும் பட்சத்தில் அந்த 3 தேர்வுகளின் மதிப்பெண்களை அடிப்படையாகக்கொண்டு, தேர்வு நடைபெறாத பாடத்திற்கும் மதிப்பெண்கள் வழங்க சிபிஎஸ்இ வாரியம் அறிவுறுத்தியுள்ளது.
I am thankful to the Hon'ble Supreme Court, Hon'ble PM Shri @narendramodi ji, and Hon'ble HM of India @AmitShah ji for accepting our proposal of not holding the #CBSE examinations of class XII from 1st July to 15th July.@cbseindia29
— Dr. Ramesh Pokhriyal Nishank (@DrRPNishank) June 26, 2020
மாணவர்கள் 3 தேர்வுகளே எழுதியிருக்கும் பட்சத்தில் அவர்கள் நன்றாக எழுதிய 2 தேர்வுகளின் மதிப்பெண்களை அடிப்படையாக வைத்துக்கொண்டு மற்ற தேர்வுகளின் மதிப்பெண்கள் நிர்ணயிக்கப்படும் என்று மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, சிபிஎஸ்இ வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, டெல்லியில் மட்டுமே 12ம் வகுப்பு மாணவர்கள்ல ஒன்று அல்லது 2 தேர்வுகளில் மட்டுமே பங்கேற்றுள்ளனர். இவர்களுக்கு இதற்குமுன் இவர்கள் எழுதிய தேர்வுகள், இன்டர்னல், பிராக்டிக்ல் தேர்வுகளில் பெற்ற மதிப்பெண்களை அடிப்படையாக கொண்டு மதிப்பெண்கள் வழங்கப்படும். இந்த மாணவர்கள்,தங்களது மதிப்பெண்களை அதிகரித்துக்கொள்ள இம்ப்ரூவ்மெண்ட் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர், ஆனால், இது அவர்கள் விருப்பத்தின் பேரிலேயே நடத்தப்படும், யாரையும் கட்டாயப்படுத்த மாட்டோம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.