பள்ளிகள் ஆகஸ்ட் மாதத்தில் திறப்பா ? : மத்திய அமைச்சர் பதில்
HRD ministry : பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் போது மாணவர்கள் எவ்வாறு அமர வைக்கப்பட வேண்டும், பள்ளி வேலைநேரங்கள் உள்ளிட்ட விபரங்கள் குறித்து, சமீபத்தில் நடந்த வெப்மினாரில் விரிவாக விவாதிக்கப்பட்டுள்ளது.
மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி அளிக்கும் பட்சத்தில், ஆகஸ்ட் மாதத்தில் பள்ளிகள் திறக்க வாய்ப்பு இருப்பதாக மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் நிஷாங்க் தெரிவித்துள்ளார்.
Advertisment
தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ
இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் தேசிய அளவிலான ஊரடங்கு கடந்த மார்ச் மாதம் 25ம் தேதி அமல்படுத்தப்பட்டிருந்தது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, நாட்டில் உள்ள பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் மார்ச் 23ம் தேதி முதலே காலவரையின்றி மூடப்பட்டன.
நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்பின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலை தொடர்ந்து நீடிக்கும்பட்சத்தில், பள்ளிகள், ஆகஸ்ட் 15ம் தேதிக்கு பிறகே திறக்க வாய்ப்பு உள்ளதாக மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால், பிபிசி இந்தி சேனலுக்கு அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறியதாவது, நடந்து முடிந்த சிபிஎஸ்இ தேர்வின் முடிவுகள், ஆகஸ்ட் 15ம் தேதிக்கு முன்னதாக வெளியாக வாய்ப்புள்ளது. ஆகஸ்ட் 15ம் தேதிக்கு பிறகே, புதிய கல்வியாண்டு துவங்கும்.
சிபிஎஸ்இ வாரிய தேர்வுகள், ஜூலை 1 முதல் 15ம் தேதி வரையிலும், ஐசிஎஸ்இ / ஐஎஸ்சி தேர்வுகள், ஜூலை 1 முதல் 12ம் தேதி வரையிலும் நடைபெற உள்ளதாக அவர் தெரிவித்தார்.
பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் போது மாணவர்கள் எவ்வாறு அமர வைக்கப்பட வேண்டும், பள்ளி வேலைநேரங்கள் உள்ளிட்ட விபரங்கள் குறித்து, சமீபத்தில் நடந்த வெப்மினாரில் விரிவாக விவாதிக்கப்பட்டுள்ளது. வகுப்பில் 30 சதவீத மாணவர்கள் மட்டுமே ஒருநேரத்தில் இருக்குமாறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளதாகவும், இதற்கான நடவடிக்கைகளில் NCERT ஈடுபட்டு வருவதாக பொக்ரியால் தெரிவித்துள்ளார்.
NCERT அமைப்பு, UGC உள்ளிட்ட உயர்கல்வி நிறுவனங்களுடன் இணைந்து பள்ளி, கல்லூரிகளுக்கான வரும் கல்வியாண்டில் இருந்து, புதிய நடைமுறைத்திட்டத்தை வகுத்துள்ளது. பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களில், சுகாதாரம், இதுகுறித்த நடவடிக்கைகளை மேற்கொள்ள சிறப்புப்படைகளை உருவாக்கியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil