தேசிய பொது முடக்க காலத்தில், மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படுவதில்லை என்பதை உறுதி செய்யும் விதமாக, 1 முதல் 12 வகுப்பு புத்தகங்கள் அனைத்தும் ஆன்லைனில் கிடைக்க ஏற்பாடு செய்துள்ளது சி.பி.எஸ்.இ. ஆங்கிலம் மற்றும் இந்தி வழிக்கல்வி பயிலும் மாணவர்களுக்காக, இந்த என்சிஇஆர்டி புத்தகங்கள், பிடிஎப் வடிவத்திலும், ஃபிளிப் புத்தகங்களாகவும் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
பொது முடக்கம் மே 3 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதால், அனைத்து பள்ளிகளும் மூடப்பட்டுள்ளன. 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான வாரிய தேர்வுகள் இன்னும் முடிக்கப்படாத நிலையில், 1 முதல் 9 வகுப்பு மாணவர்களும்,11ம் வகுப்பு மாணவர்களும், தேர்வை சந்திக்காமல் அடுத்த வகுப்புக்கு செல்ல இருக்கின்றனர். குறிப்பாக, 9 மற்றும் 11ம் வகுப்புப் படிக்கும் மாணவர்கள் பள்ளிகளில் பெற்றுள்ள தரவரிசையின் அடிப்படையில் தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்கப்படுவார்கள். இந்த மாணவர்களுக்கான புதிய அமர்வுகள், இன்னும் தொடங்கப்படாததால் சி.பி.எஸ்.இ இந்த முயற்சியை எடுத்துள்ளது.
முன்னதாக,இந்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் ‘நிஷாங்க்’, இந்தியாவின் ஆன்லைன் கல்வி சுற்றுச்சூழல் அமைப்பை மேம்படுத்துவதற்கான யோசனைகளை வளர்ப்பதற்காக ‘இந்தியர்கள் இணைய வழியில் பயில வேண்டும்’ (‘Bharat Padhe Online’) என்ற ஒரு வார கால பிரச்சாரத்தை 2020 ஏப்ரல் 10 ஆம் தேதி புதுடில்லியில் தொடங்கி வைத்தார்.
கொவிட்-19 ஊரடங்கின் போது டிஜிட்டல் கற்றல் அதிகரித்துள்ளதாக மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதில், மார்ச் 23, 2020 முதல், மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் பல்வேறு மின்னணு கற்றல் தளங்களை இதுவரை இல்லாத அளவுக்கு 1.4 கோடிக்கும் அதிகமானோர் அணுகியுள்ளதைக் காணமுடிகிறது. நேற்று வரை, தேசிய ஆன்லைன் கல்வி தளமான சுவயம், 2.5 லட்சம் தடவை அணுகப்பட்டுள்ளது. இது, மார்ச் மாதம் கடைசி வாரத்தில் இருந்ததைப் போல (50,000 தடவை) ஐந்து மடங்காகும்.
இதுபோல, சுவயம் பிரபா டிடிஎச் அலைவரிசைகளை தினசரி சுமார் 59,000 பேர் பார்த்து வருகின்றனர். ஊரடங்கு தொடங்கியதிலிருந்து, 6.8 லட்சத்துக்கும் கூடுதலானோர் இதைக் கண்டுள்ளனர்" என்றும் குறிபிட்டுள்ளது.
மேலும், வாசிக்க:
அறிவு, புத்தகம் மூலம் கோவிட்- 19 நோயை எதிர்கொள்ள வேண்டும்: மாணவர்களுக்கு 'யுக்தி' போர்டல் அறிமுகம்
10ம் வகுப்புக்குப் பிறகு என்ன படிக்கலாம்? பதில் தெரிய 4 சிம்பிள் டிப்ஸ்
செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட 3 திறனறிவு பாடங்கள் அறிமுகம் : சி.பி.எஸ்.இ அப்டேட்ஸ்