கோவை பந்தயசாலை பகுதியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் உயிர் சாலை பாதுகாப்பு ஹேக்கத்தான் எனும் விழிப்புணர்வு துவக்க நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அமைச்சர் செந்தில் பாலாஜி,மாவட்ட ஆட்சியர்,மாநகர காவல் ஆணையர், மாநகராட்சி ஆணையர், ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியை தொடர்ந்து மேடையில் அமைச்சர் செந்தில் பாலாஜி பேசியதாவது,”மருத்துவர்கள் கோயம்புத்தூரில் எடுத்த முயற்சி பாராட்டுக்குரியது. ஒவ்வொருவரும் இதில் எடுத்திருக்க கூடிய முயற்சி என்பது எத்தனை அமைப்புகள் இருந்தாலும் நிர்வாகத்தின் கீழ் பணியாற்றினாலும் ஒரு உயிரை காப்பாற்றக்கூடிய மகத்தான பணியை முன்னெடுத்தது இருப்பது என்பது பாராட்டக் கூடியது.
முதலமைச்சர் தொடங்கி வைக்கப்பட்ட அந்த பயணம் இன்னும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இதனுடைய வெற்றியை நிறைவு செய்கிறோம் என்றால் ஒரு விபத்துல கோவையை உருவாக்கிற நாள் தான் வெற்றி நாளாக அமையும்.
அரசும் உயிர் அமைப்பும் இணைந்து இவற்றை நிறைவேற்ற முடியும் என நினைத்தால் சற்று கடினம். பொதுமக்கள் இதில் இணைந்து அவர்களுடைய முழு ஒத்துழைப்பையும் வழங்கினால் மட்டுமே வெற்றி அடைய முடியும். தொடர்ந்து அரசு சார்பில் ஆண்டுதோறும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நாளாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
இதன் மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது” என்று கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“