கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள கே.ஜி.ஐ.எஸ்.எல் தொழில்நுட்ப கல்லூரியில் பட்டமளிப்பு விழாவில் 322 பேர் பட்டம் பெற்றனர். கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள கே.ஜி.ஐ.எஸ்.எல் தொழில்நுட்ப கல்லூரியின் 13"ஆம் ஆண்டு பட்டமளிப்பு மற்றும் கல்லூரி அரங்கில் நடைபெற்றது.
கே.ஜி.ஐ.எஸ்.எல்.குழுமங்களின் நிர்வாக இயக்குனர் முனைவர் அசோக் பக்தவச்சலம் தலைமையில் நடைபெற்ற விழாவில் சிறப்பு விருந்தினர்களாக AICTE டெல்லியின் உறுப்புச் செயலாளர் பேராசிரியர். முனைவர். ராஜீவ் குமார் மற்றும் பெங்களூரு Wequity, , நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி கீதா கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
முன்னதாக மாணவர்களிடையே கீதா கண்ணன் பேசுகையில், மாணவர்கள் தங்களது தனித்துவமான திறன்களை அதிகம் வளர்த்தி கொள்ள வேண்டும் என்றும் இன்றைய கார்ப்பரேட் உலகத்தில் டிஜிட்டல் தளங்களை மிகுந்த கவனத்துடன் கையாள்வது அவசியம் என வலியுறுத்தினார்.
தொடர்ந்து பேசிய முனைவர் ராஜீவ் குமார்,கற்பதற்கு எல்லைகள் இல்லை என குறிப்பிட்ட அவர்,கல்லூரி படிப்பை முடித்து ஒரு நிறுவனத்தில் ஊழியராகவோ அல்லது தொழில் முனைவோராக மாறினாலும் புதிய விஷயங்களை தொடர்ந்து கற்று கொண்டே இருக்க வேண்டும் என தெரிவித்தார்.
தொடர்ந்து அவர், செயற்கை நுண்ணறிவில் முன்னேற்றங்கள் , சைபர் பாதுகாப்பு, நானோ தொழில்நுட்பம், உயிர்த்தொழில்நுட்பம் மற்றும் குவாண்டம் தொழில்நுட்பம் பற்றிப் பேசினார்.
தொடர்ந்து கே.ஜி.ஐ.எஸ்.எல். அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் டாக்டர். அசோக் பக்தவத்சலம் பேசுகையில்,கல்லூரி படிப்பை முடித்து செல்லும் மாணவர்கள் திறன்கள் , ஆன்மிகம், மற்றும் சமூக நலன் ஆகிய மூன்று செயல்களை கடைபிடிக்க வேண்டும் என கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர் பட்டமளிப்பு பெறுபவர்களில் 106 பேர் முதல் தலைமுறை பட்டதாரிகள் என்றும், இது அவர்கள் முழு குடும்பத்திற்கும் வாழ்க்கையை மாற்றும் முக்கியமான ஒரு நிகழ்வாக அமையும் என நெகிழ்ச்சி தெரிவித்தார்.
மொத்தம் 322 பட்டதாரிகள் தங்களின் பட்டங்களை பெற்றனர். நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர், துறை தலைவர்கள், பேராசிரியர்கள் பெற்றோர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கார்ப்பரேட் உலகத்தில் டிஜிட்டல் தளங்களை மிகுந்த கவனத்துடன் கையாள்வது அவசியம் எனவும் செயற்கை நுண்ணறிவில் முன்னேற்றங்கள் மற்றும் சைபர் பாதுகாப்பு, நானோ தொழில்நுட்பம், உயிர்த்தொழில்நுட்பம் மற்றும் குவாண்டம் தொழில்நுட்பம் பற்றியும் மாணவ மாணவிகளுக்கு "AICTE" டெல்லியின் உறுப்புச் செயலாளர் பேராசிரியர் மற்றும் முனைவர். ராஜீவ் குமார் எடுத்துரைத்தார்.
பி.ரஹ்மான் - கோவை மாவட்டம்