JEE Main 2021: பிப்ரவரி மாத ஒருங்கிணைந்த பொறியியல் நுழைவுத் தேர்வில் 100 சதவீதம் மதிப்பெண் பெற்ற ஆறு மாணவர்களில் ஒருவரானா ரஞ்சிம் தாஸ் இந்தியன் கொரோனா நோய்த் தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டு குணமடைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழுக்கு அவர் அளித்த் சிறப்பு பேட்டியில்," கடந்தாண்டு நவம்பர் மாதம் கொரோனா நோய்த் தொற்று அறிகுறிகள் தென்பட்டது. காய்ச்சல், தலைவலி காரணமாக இரண்டு நாட்கள் மட்டுமே ஓய்வில் இருந்தேன். பின்னர், தனிமைப்படுத்தப்பட்ட பின்பு இணையவழி கல்வி மூலமாக படிப்பைத் தொடர்ந்தேன்" என்று தெரிவித்தார்.
கொரோனா நோய்த் தொற்று காரணமாக பயிற்சி மையத்திற்கு செல்ல வேண்டிய நேரம் மிச்சம் ஆனது. இதன் காரணமாக படிப்பதற்கு கூடுதல் நேரம் ஒதுக்க முடிந்தது. கொரோனா தொற்று ஊரடங்கை ஒரு வரமாக தான் பார்க்க முடிகிறது என்று ரஞ்சிம் கூறுகிறார்.
என்சிஇஆர்டி புத்தகங்களை அடிப்படையாக கொண்டபோதிலும், போட்டித் தேர்வுக்கான சிறப்பு பயிற்சி புத்தகங்கள் மற்றும் ஆய்வுப் பொருட்களை பின்பற்றியதாக ரஞ்சிம் பின்பற்றியுள்ளார்.
" தன்னம்பிக்கையை வலுப்படுத்தவும், பொதுவான புரிதலை அதிகரிப்பதற்கும் தேர்வுக்கு முன்னதாக மொத்தம் 32 மாக் டெஸ்ட் தேர்வை எழுதினேன்," என்று கூறினார்.
இயற்பியலுக்கு IE Irodov, வேதியியலுக்கு எம்.எஸ் சவுகான், நீரஜ் குமார், கணிதத்திற்கு கன்ஷ்யம் தேவானி ஆகியரோரின் புத்தகங்களை வாசித்ததாக தெரிவித்தார்.
Covid-19 survivor Ranjim Das tops JEE Main 2021, aspires to be another Elon Musk
பிப்ரவரி 25ம் தேதியன்று நடந்த மாலை அமர்வில் கலந்து கொண்டேன். வினாத்தாள் சற்று கடினமாக இருந்தது. சில காலங்களுக்கு முன்பிருந்தே நுழைவுத் தேர்வுக்கு தயாராக தொடங்கி விட்டேன். அதன் காரணமாக இயற்பியல், வேதியியல் பாடங்களில் உள்ள சில கடினமான கேள்விகளை எளிதில் தீர்க்க முடிந்தது என்று கூறினார்.
டெஸ்லா இன்க் மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் ஆகிய நிறுவனங்களின் தலைவரான எலோன் மஸ்க் போன்று அசாதாரண தொழில்நுட்ப அடிப்படையிலான தயாரிப்புகளை கண்டுபிடிப்பததற்கான கனவுகளையும் கொண்டுள்ளர்.
பொதுவாக, ஜேஇஇ டாப்பர்கள் மும்பை ஐஐடி நிறுவனத்தில் சேர்வது வழக்கம். ஆனால், டெல்லியை விட்டு வெளியேற விரும்பாத காரணத்தினால் ஐஐடி-டெல்லியில் கணினி அறிவியலைப் படிக்க விரும்புவதாக தெரிவித்தார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil