மாணவர்கள் தங்கள் ஆர்வம் மற்றும் விருப்பத்திற்கு ஏற்ற துறையை தேர்வு செய்தால் வெற்றி நிச்சயம் என கோவையில் நடைபெற்ற தனியார் கல்லூரியின் ட்டமளிப்பு விழாவில் மகாராஷ்டிரா மாநில ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
கோவை ஈச்சனாரி பகுதியில் உள்ள தனியார் கல்லூரியின் 14-வது பட்டமளிப்பு விழா தனியார் அரங்கில் நடைபெற்றது. செவிலியர் துறை, பார்மசி, தொழில்சார் சிகிச்சை, பிசியோதெரபி மற்றும் துணை சுகாதார அறிவியல் உள்ளிட்ட துறைகளுக்காக நடைபெற்ற இதில், மகாராஷ்டிரா மாநில ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு பல்வேறு துறைகளில் இளங்கலை மற்றும் முதுகலை பட்டதாரி மாணவ,மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கி பேசினார்.
/indian-express-tamil/media/post_attachments/66df201a-b14.jpg)
அப்போது அவர் பேசுகையில், உலக அளவில் செவிலிய துறையில் இந்திய செவிலியர்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவர்களாக தெரிவத்த அவர், உலகம் முழுவதும் இந்திய செவிலியர்களின் பணி பரந்து விரிந்து இருப்பதாக கூறினார். சிகிச்சை பெற்று வரும் நோயாளிக்கு முதல் மருந்து செவிலியர்களின் பரிவான கவனிப்பும்,அன்பும் மட்டுமே என்று கூறிய அவர், கற்றல் மற்றும் கடின உழைப்பு வெற்றிக்கு முக்கியம் என்றும், தொழில் வாழ்க்கையையும், வாழ்க்கையையும் மேம்படுத்த இது மிகவும் அவசியம் என தெரிவித்தார்.
மாணவர்கள் தங்கள் ஆர்வம் மற்றும் விருப்பத்திற்கு ஏற்ப தங்கள் வாழ்க்கைப் பாதையை தேர்வு செய்வதால் வெற்றியை எளிதில் பெறலாம் என அவர் கூறினார். இந்த விழாவில் ஸ்ரீ அபிராமி கல்லூரி நிறுவனங்களின் தலைவர் டாக்டர் பெரியசாமி,மற்றும் டாக்டர் முருகநாதன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
செய்தி: பி.ரஹ்மான் - கோவை மாவட்டம்.