Advertisment

சென்னை பெட்ரோலியம் கார்ப்ரேஷன் வேலைவாய்ப்பு; டிப்ளமோ படித்தவர்கள் மிஸ் பண்ணாதீங்க!

சென்னை பெட்ரோலியம் கார்ப்ரேஷன் நிறுவனத்தில் வேலை; 10-ம் வகுப்பு, டிப்ளமோ படித்தவர்கள் உடனே அப்ளை பண்ணுங்க!

author-image
WebDesk
New Update
சென்னை பெட்ரோலியம் கார்ப்ரேஷன் வேலைவாய்ப்பு; டிகிரி, பி.இ/பி.டெக் படித்தவர்கள் மிஸ் பண்ணாதீங்க!

CPCL recruitment 2022 for 72 JEA, JTA posts apply soon: சென்னை பெட்ரோலியம் கார்ப்ரேஷன் நிறுவனத்தில் டிப்ளமோ படித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளிவந்துள்ளது. மொத்தம் 72 பணியிடங்கள் நிரப்பட உள்ளன.

Advertisment

பொதுத்துறை நிறுவனமான சென்னை பெட்ரோலியம் கார்ப்ரேஷனில், இளநிலை பொறியியல் உதவியாளர் (Junior Engineering Assistant) மற்றும் இளநிலை தொழில்நுட்ப உதவியாளர் (Junior Technical Assistant) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 14.04.2022க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

காலியிடங்களின் விவரம்

Junior Engineering Assistant -IV (Production) - 17

Junior Engineering Assistant -IV (Production) Trainee - 16

Junior Engineering Assistant -IV (Mechanical) - 4

Junior Engineering Assistant -IV (Mechanical) Trainee - 5

Junior Engineering Assistant - IV (Electrical) - 4

Junior Engineering Assistant - IV (Electrical) Trainee - 4

Junior Engineering Assistant -IV (Instrumentation) - 3

Junior Engineering Assistant -IV (Instrumentation) Trainee - 2

Junior Engineering Assistant -IV (P&U– Mechanical) Trainee - 2

Junior Engineering Assistant - IV (P&U Electrical) Trainee - 1

Junior Technical Assistant -IV (Fire & Safety) - 8

Junior Technical Assistant -IV (Fire & Safety) Trainee - 6

கல்வித் தகுதி: Junior Engineering Assistant பணியிடங்களுக்கு சம்பந்தப்பட்ட பாடப்பிரிவுகளில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். மேலும் 2 வருட பணி அனுபவம் தேவை.

Junior Engineering Assistant Trainee பணியிடங்களுக்கு சம்பந்தப்பட்ட பாடப்பிரிவுகளில் டிப்ளமோ முடித்திருந்தால் போதும்.

Junior Technical Assistant பணியிடங்களுக்கு பத்தாம் வகுப்பு அல்லது ஐடிஐ படிப்புடன் சான்றிதழ் படிப்பு முடித்திருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 25,000-1,05,000

இதையும் படியுங்கள்: குறைந்த கல்வித் தகுதி… மதுரை அஞ்சல் துறை வேலை வாய்ப்பு… உடனே விண்ணப்பிங்க!

வயதுத்தகுதி: 01.02.2022 அன்று 30 வயதிற்குள் இருக்க வேண்டும். இருப்பினும், OBC பிரிவுகளுக்கு 3 ஆண்டுகளும், SC/ST பிரிவுகளுக்கு 5 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு உண்டு.

அதேநேரம் டிரெய்னி பணியிடங்களுக்கு 26 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: இந்த பணியிடங்களுக்கு எழுத்து தேர்வில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். எழுத்து தேர்வு ஆன்லைன் முறையில் நடைபெறும்.

விண்ணப்பிக்கும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://cpcl.onlineregistrationform.org/TNCPCL/ என்ற இணையதளப் பக்கம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: பொதுப் பிரிவினருக்கு ரூ.1000, SC/ST, மாற்றுதிறனாளிகள் மற்றும் முன்னாள் ராணுவத்தினர் பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

விண்ணப்பிக்க கடைசி தேதி 14.04.2022

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://cpcl.onlineregistrationform.org/TNCPCLDOC/Notification.pdf என்ற இணையதளப் பக்கத்தினைப் பார்வையிடவும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu Jobs Jobs
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment