Advertisment

சென்னை பெட்ரோலியம் கார்ப்ரேஷன் வேலை வாய்ப்பு; டிப்ளமோ படித்தவர்கள் மிஸ் பண்ணாதீங்க!

சென்னை பெட்ரோலியம் கார்ப்ரேஷன் நிறுவனத்தில் வேலை; டிப்ளமோ படித்தவர்கள் உடனே அப்ளை பண்ணுங்க!

author-image
WebDesk
New Update
சென்னை பெட்ரோலியம் கார்ப்ரேஷன் வேலை வாய்ப்பு; 10-ம் வகுப்பு தகுதி; மிஸ் பண்ணாதீங்க!

சென்னை பெட்ரோலியம் கார்ப்ரேஷன் நிறுவனத்தில் டிப்ளமோ படித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளிவந்துள்ளது. விருப்பமுள்ளவர்கள் இந்த அருமையான வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

Advertisment

பொதுத்துறை நிறுவனமான சென்னை பெட்ரோலியம் கார்ப்ரேஷனில், மணலி சுத்திகரிப்பு நிலையத்தில் டிப்ளமோ பயிற்சி (அப்ரண்டிஸ்) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 07.12.2022க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

இதையும் படியுங்கள்: சுகாதாரத் துறை வேலை வாய்ப்பு; குறைந்தபட்ச கல்வித் தகுதி; உடனே விண்ணப்பிங்க!

பயிற்சி இடங்களின் விவரம்

Chemical

Mechanical

Electrical and Electronics

Instrumentation/ ECE

Civil

கல்வித் தகுதி: இந்த பயிற்சி பணியிடங்களுக்கு 2020, 2021, 2022 ஆகிய ஆண்டுகளில் சம்பந்தப்பட்ட பாடப்பிரிவுகளில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

உதவித் தொகை: ரூ. 8,000

வயதுத்தகுதி: இந்தப் பணியிடங்களுக்கு 26 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: இந்த பணியிடங்களுக்கு கல்வித் தகுதியில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க http://boat-srp.com/wp-content/uploads/2022/12/CPCL.pdf என்ற இணையதளப் பக்கத்தில் அறிவிப்புக்குக் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து, பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி 07.12.2022

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய http://boat-srp.com/wp-content/uploads/2022/12/CPCL.pdf என்ற இணையதளப் பக்கத்தினைப் பார்வையிடவும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Jobs
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment