Advertisment

சென்னை பெட்ரோலியம் கார்ப்ரேஷன் வேலைவாய்ப்பு; டிகிரி, பி.இ/பி.டெக் படித்தவர்கள் மிஸ் பண்ணாதீங்க!

சென்னை பெட்ரோலியம் கார்ப்ரேஷன் நிறுவனத்தில் வேலை; டிகிரி, இன்ஜினியரிங் படித்தவர்கள் உடனே அப்ளை பண்ணுங்க!

author-image
WebDesk
New Update
சென்னை பெட்ரோலியம் கார்ப்ரேஷன் வேலைவாய்ப்பு; டிகிரி, பி.இ/பி.டெக் படித்தவர்கள் மிஸ் பண்ணாதீங்க!

CPCL recruitment 2022 for Engineer and Officer posts apply soon: சென்னை பெட்ரோலியம் கார்ப்ரேஷன் நிறுவனத்தில் டிகிரி மற்றும் இன்ஜினியரிங் படித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளிவந்துள்ளது. மொத்தம் 22 பணியிடங்கள் நிரப்பட உள்ளன.

Advertisment

பொதுத்துறை நிறுவனமான சென்னை பெட்ரோலியம் கார்ப்ரேஷனில், பொறியாளர் (Engineer) மற்றும் அலுவலர் (Officer) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 21.09.2022க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

இதையும் படியுங்கள்: BHEL Jobs; திருச்சி பெல் நிறுவனத்தில் 575 பணியிடங்கள்; ஐ.டி.ஐ முதல் பி.இ வரை படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

Engineer (Chemical)

காலியிடங்களின் எண்ணிக்கை : 4

கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Degree in Engineering / Technology in Chemical / Petroleum / Petrochemicals படித்திருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 50,000 – 1,80,000

Engineer (Mechanical)

காலியிடங்களின் எண்ணிக்கை : 4

கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Degree in Engineering / Technology in Mechanical படித்திருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 50,000 – 1,80,000

Engineer (Electrical)

காலியிடங்களின் எண்ணிக்கை : 2

கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Degree in Engineering / Technology in Electrical / Electrical & Electronics படித்திருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 50,000 – 1,80,000

Engineer (Civil)

காலியிடங்களின் எண்ணிக்கை : 2

கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Degree in Engineering / Technology in Civil படித்திருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 50,000 – 1,80,000

Engineer (Instrument)

காலியிடங்களின் எண்ணிக்கை : 2

கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Degree in Engineering / Technology in Instrumentation (including Electronics & Instrumentation) / Instrumentation & Control) படித்திருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 50,000 – 1,80,000

Engineer (Metallurgy)

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Degree in Engineering / Technology in Metallurgy including Material Science & Engineering படித்திருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 50,000 – 1,80,000

Officer (HR)

காலியிடங்களின் எண்ணிக்கை : 3

கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டப்படிப்பு மற்றும் Post Graduate Diploma / Degree in Human Resources Management / Personnel Management / Industrial Relations / Labour Welfare / Master of Social Work / Master Degree in Business Administration (MBA) படித்திருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 50,000 – 1,80,000

Officer (Marketing)

காலியிடங்களின் எண்ணிக்கை : 2

கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Degree in Engineering in either Chemical / Mechanical / Electrical / Civil படித்திருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 50,000 – 1,80,000

Officer (ITS)

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Degree in Engineering in Computer Science / Information Technology / Electronics & Communication படித்திருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 50,000 – 1,80,000

Officer (Legal)

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி: Degree in Law / LLB முடித்திருக்க வேண்டும். மேலும் 2 வருட பணி அனுபவம் தேவை.

சம்பளம் : ரூ. 50,000 – 1,80,000

வயதுத்தகுதி: 01.07.2022 அன்று 26 வயதிற்குள் இருக்க வேண்டும். இருப்பினும், OBC பிரிவுகளுக்கு 3 ஆண்டுகளும், SC/ST பிரிவுகளுக்கு 5 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு உண்டு.

Officer (Legal) பணியிடங்களுக்கு 28 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

தேர்வு செய்யப்படும் முறை: இந்த பணியிடங்களுக்கு எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். எழுத்து தேர்வு ஆன்லைன் முறையில் நடைபெறும்.

விண்ணப்பிக்கும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://cpcl.co.in/company/people/careers/  என்ற இணையதளப் பக்கம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: பொதுப் பிரிவினருக்கு ரூ.1000, SC/ST, மாற்றுதிறனாளிகள் மற்றும் முன்னாள் ராணுவத்தினர் பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

விண்ணப்பிக்க கடைசி தேதி 21.09.2022

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://cpcl.co.in/wp-content/uploads/2022/08/Advertisment-Officer-2022-Final.pdf என்ற இணையதளப் பக்கத்தினைப் பார்வையிடவும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Jobs
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment