சென்னை பெட்ரோலியம் கார்ப்ரேஷன் நிறுவனத்தில் 10 ஆம் வகுப்பு, டிகிரி படித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளிவந்துள்ளது. விருப்பமுள்ளவர்கள் இந்த அருமையான வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
பொதுத்துறை நிறுவனமான சென்னை பெட்ரோலியம் கார்ப்ரேஷனின் சென்னை அலுவலகத்தில் கீழ்கண்ட பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 9 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 09.01.2023க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.
இதையும் படியுங்கள்: அண்ணா பல்கலை. வேலை வாய்ப்பு; தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்!
Senior Manager (Administration)
காலியிடங்களின் எண்ணிக்கை - 1
கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு பிரிவில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். அல்லது எம்.பி.ஏ படித்திருக்க வேண்டும்.
வயதுத்தகுதி:இந்தப் பணியிடங்களுக்கு 50 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ.90,000
Officer (Administration)
காலியிடங்களின் எண்ணிக்கை - 2
கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு பிரிவில் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுத்தகுதி:இந்தப் பணியிடங்களுக்கு 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ.50,000
Junior Technical Assistant IV (Fire & Safety)
காலியிடங்களின் எண்ணிக்கை - 6
கல்வித் தகுதி: 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயதுத்தகுதி:இந்தப் பணியிடங்களுக்கு 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ.25,000
இந்தப் பணியிடங்களுக்கு ராணுவம் அல்லது கடற்படை அல்லது விமானப் படையில் பணியாற்றிய அனுபவம் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: இந்த பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://pms.cpcl.co.in/recuritment/register.aspx/ என்ற இணையதளப் பக்கம் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி 09.01.2023
இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://cpcl.co.in/wp-content/uploads/2022/12/Advertisment-for-Admn-Fire.pdf என்ற இணையதளப் பக்கத்தினைப் பார்வையிடவும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil