Advertisment

UPSC CSAT சிரம நிலை அதிகரிப்பு; ஆங்கிலம் தெரியாதவர்களுக்கு கடினமாகி வரும் சிவில் சர்வீஸ் தேர்வு

UPSC சிவில் சர்வீசஸ்: மேம்படுத்தப்பட்ட CSAT சிரமம் மற்றும் குறைவான புத்தகங்கள், ஆங்கில வழியில் படிக்காத ஆர்வலர்களுக்கு கடினமாகி வருகிறது ஐ.ஏ.எஸ் கனவு

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
UPSC exam

UPSC சிவில் சர்வீசஸ்: மேம்படுத்தப்பட்ட CSAT சிரமம் மற்றும் குறைவான புத்தகங்கள், ஆங்கில வழியில் படிக்காத ஆர்வலர்களுக்கு கடினமாகி வருகிறது ஐ.ஏ.எஸ் கனவு (பிரதிநிதித்துவ படம்)

Sakshi Saroha

Advertisment

ஹரியானா மாநிலம் ஹிசார் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவரும் யு.பி.எஸ்.சி (UPSC) ஆர்வலருமான ஜகதீஷ் குமார், தனது பள்ளி மற்றும் கல்லூரி படிப்புகளை ஹிந்தி மொழியில் படித்தார். அவர் சிவில் சர்வீஸ் தேர்வுக்காக புத்தகங்களைத் தேடி டெல்லியின் பழைய ராஜேந்திர நகரில் உள்ள புத்தக விற்பனைக் கடைகளில் உலாவும்போது, ​​ஹிந்தி மொழியில் குறைவான புத்தகங்கள் இருப்பதை தெரிந்துக் கொண்டார்.

"அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், உள் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் போன்ற பாடங்களுக்கு, இந்தியில் புத்தகங்களைக் கண்டுபிடிப்பது சாத்தியமில்லை. விருப்பப் பாடங்களைப் பற்றி பேசவே வேண்டாம். சிறந்த பயிற்சி வசதி மற்றும் புத்தகங்கள் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் நான் டெல்லி வந்தேன், ஆனால் ஆங்கில மொழியில் தேர்வுகளுக்குத் தயாராகும் ஆர்வலர்கள் தவிர மற்றவர்களுக்கு, UPSC தேர்வுகள் 10 மடங்கு கடினமானது. மொழிபெயர்க்கப்பட்ட புத்தகங்கள் கூட மோசமான மொழிபெயர்ப்புகளைக் கொண்டுள்ளன, மேலும் என்னைப் போன்ற ஆர்வலர்கள் ஆங்கில புத்தகங்களைப் படித்து பதில்களை அவர்களே மொழிபெயர்த்து விடுகிறார்கள், ”என்று ஜகதீஷ் குமார் கூறினார்.

இதையும் படியுங்கள்: நகைகள் தயாரிப்பு இலவச பயிற்சி; யூஸ் பண்ணிக்கோங்க பெண்களே!

(யு.பி.எஸ்.சி.,யின் ஆண்டு அறிக்கைகளில் உள்ள தரவுகளின்படி) பல ஆண்டுகளாக, ஹிந்தி மற்றும் பிற பிராந்திய மொழிகளில் தேர்வு எழுதும் மாணவர்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்து வருகிறது.

இதை கவனத்தில் கொண்டு, சிவில் சர்வீசஸ் தேர்வு மூலம் தற்போதுள்ள ஆள்சேர்ப்புத் திட்டம் ஆங்கில வழிக் கல்வி பயின்ற நகர்ப்புற தேர்வர்கள் மற்றும் ஆங்கில வழியில் படிக்காத கிராமப்புற தேர்வர்கள் ஆகிய இருவருக்கும் சமமான வாய்ப்பை வழங்குகிறதா என்பதை மதிப்பிடுவதற்கு நிபுணர் குழுவை அமைக்குமாறு பணியாளர்கள், பொதுக் குறைகள், சட்டம் மற்றும் நீதி தொடர்பான துறை தொடர்பான நாடாளுமன்ற நிலைக்குழு சமீபத்தில் பரிந்துரைத்தது.

பல்வேறு நிபுணர் குழுக்களின் பரிந்துரைகளின் அடிப்படையில் UPSC சிவில் சர்வீசஸ் தேர்வு முறையை அவ்வப்போது மாற்றியிருந்தாலும், இத்தகைய மாற்றங்கள் ஆர்வலர்களை, ஆட்சேர்ப்பின் தன்மை மற்றும் நிர்வாகத்தை பெருமளவில் எவ்வாறு பாதித்தது என்பதை மதிப்பிடுவதற்கு இதுவரை எந்த ஆய்வும் நியமிக்கப்படவில்லை, என்று குழு கூறியது.

publive-image

UPSC, 2011 ஆம் ஆண்டில், சிவில் சர்வீசஸ் (முதன்மை) தேர்வின் ஒரு பகுதியாக சிவில் சர்வீசஸ் ஆப்டிட்யூட் டெஸ்ட் (CSAT) ஐ அறிமுகப்படுத்தியது, இது ஆர்வமுள்ளவர்களின் பகுப்பாய்வு திறன், பகுத்தறியும் திறன் மற்றும் கணித திறனை சோதிக்கிறது.

CSAT ஆனது ஆங்கிலப் புரிதல் பற்றிய கேள்விகளை உள்ளடக்கியிருந்ததால், இந்த நடவடிக்கை ஆர்வலர்களால், குறிப்பாக ஆங்கிலம் வழியில் படிக்காத மாணவர்களால் பரவலாக விமர்சிக்கப்பட்டது.

தேர்வு முறை மாற்றங்களை ஆய்வு செய்ய நியமிக்கப்பட்ட நிக்வேகர் குழு, CSAT தேர்வு முறை ஆங்கில ஆர்வலர்களுக்கு அதிக நன்மைகளை அளித்ததையும் கவனித்தது. இதைத் தொடர்ந்து, கமிஷன் மூலம், 2015 முதல் CSAT தகுதி தேர்வாக மாற்றப்பட்டது.

இருப்பினும், CSAT கேள்விகளின் சிரமம் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்துள்ளதால், அதன் தகுதித் தேர்வின் அந்தஸ்து ரத்து செய்யப்படுகிறது என்று ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

இந்த ஆண்டு முதல்நிலைத் தேர்வில், CSAT இல் உள்ள கேள்விகளின் சிரமம், முதன்மை மேலாண்மை நிறுவனங்களில் சேர்க்கைக்காக நடத்தப்பட்ட பொது நுழைவுத் தேர்வை (CAT) போன்று இருந்ததாகக் கூறி பல்வேறு ஆர்வலர்கள் கவலை தெரிவித்தனர்.

மத்திய நிர்வாக தீர்ப்பாயத்தில் ஒரு மனுவில், பல ஆர்வலர்கள் தேர்வின் மேம்பட்ட சிரமம் காரணமாக குறைந்த CSAT தகுதி கட்-ஆஃப் கோரினர்.

“யு.பி.எஸ்.சி நடத்தும் தாள் II (CSAT) பாடத்திட்டத்திற்கு புறம்பானது மட்டுமல்ல, பல்வேறு வகை தேர்வர்களுக்கு அதாவது சிறப்பு பயிற்சி பெற முடியாத ஏழ்மையான பின்னணி கொண்டவர்கள், கிராமப்புற பின்னணியில் உள்ள விண்ணப்பதாரர்கள், கலைப் பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் ஆகியோருக்கு பாரபட்சமானது,” என்று மனுவில் கூறப்பட்டுள்ளது.

லக்னோவைச் சேர்ந்த யு.பி.எஸ்.சி ஆர்வலர் ஸ்வாதி மிஸ்ரா, ஆங்கில வழியில் படிக்காத மாணவர்களுக்கு CSAT அறிமுகம் நியாயமற்றது என்றும், தாளில் கடினமான கேள்விகள் இருப்பதால், தேர்வில் தேர்ச்சி பெறுவது கடினமானது என்றும் கூறினார்.

மேலும், "கடந்த ஆண்டு, நான் முதல்நிலை தேர்வில் GS I தகுதி பெற்றேன், ஆனால் CSAT க்கு தகுதி பெற முடியவில்லை. மிகவும் கடினமாகப் படித்த பிறகும், தகுதித் தாளால் மெயின்ஸுக்கு வரமுடியாமல் போனது என் நம்பிக்கையை பாதித்தது. பிராந்திய மொழி தேர்வு எழுதுபவர்கள் தேர்வுக்கான புத்தகங்களையும் வழிகாட்டுதலையும் தேடுவது ஏற்கனவே ஒரு போர். கிராமப்புற மற்றும் இந்தி வழி கல்விப் பின்னணியில் உள்ள மாணவர்களை யு.பி.எஸ்.சி கருத்தில் கொள்ள வேண்டும்,” என்றும் ஸ்வாதி மிஸ்ரா கூறினார்

BYJU'S இன் UPSC ஆசிரியரான சர்மத் மெஹ்ராஜ், CSAT தேர்வு முறை UPSC ஆல் வரையறுக்கப்பட்ட பாடத்திட்டத்தின்படி இருக்க வேண்டும் என்று ஒப்புக்கொண்டார்.

“கிராமப்புறங்களைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள், இந்தி பின்னணி ஆர்வலர்கள் மற்றும் பொறியியல் அல்லாத பின்னணி மாணவர்களுக்கு நியாயமான வாய்ப்பை வழங்க CSAT சிரமம் குறைக்கப்பட வேண்டும். யு.பி.எஸ்.சி, இன்றைய நிலையில், இந்தி வழி தேர்வர்களுக்கு எதிராக ஒரு சார்புடையதாகத் தோன்றுகிறது,” என்று சர்மத் மெஹ்ராஜ் கூறினார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Upsc Civil Service Exam
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment