Advertisment

மத்திய அரசு வேலை வாய்ப்பு: டிகிரி தகுதிக்கு 444 பணியிடங்கள்; உடனே விண்ணப்பிங்க!

அறிவியல் மற்றும் தொழிற்துறை ஆராய்ச்சி கவுன்சிலில் 444 அதிகாரி பணியிடங்கள்; டிகிரி முடித்தவர்கள் உடனே அப்ளை பண்ணுங்க!

author-image
WebDesk
New Update
csir jobs

அறிவியல் மற்றும் தொழிற்துறை ஆராய்ச்சி கவுன்சிலில் 444 அதிகாரி பணியிடங்கள்; டிகிரி முடித்தவர்கள் உடனே அப்ளை பண்ணுங்க!

அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில் (CSIR) ஒருங்கிணைந்த நிர்வாக சேவைகள் தேர்வுக்கான (COMBINED ADMINISTRATIVE SERVICES EXAMINATION – 2023 (CASE – 2023)) அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்தத் தேர்வு மூலம் முதுநிலை அலுவலர் மற்றும் உதவி பிரிவு அலுவலர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 444 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தகுதியுள்ளவர்கள் 12.01.2024க்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

Advertisment

Section Officer

காலியிடங்களின் எண்ணிக்கை: 76

கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயதுத் தகுதி: 33 வயதிற்குள் இருக்க வேண்டும். மத்திய அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வு உண்டு.

சம்பளம்: ரூ. 47,600 – 1,51,100

Assistant Section Officer

காலியிடங்களின் எண்ணிக்கை: 368

கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயதுத் தகுதி: 33 வயதிற்குள் இருக்க வேண்டும். மத்திய அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வு உண்டு.

சம்பளம்: ரூ. 44,900 –1,42,400

தேர்வு முறை: இந்த பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

எழுத்துத் தேர்வில் ஆங்கிலம் மற்றும் பொது அறிவு பகுதிகளில் இருந்து வினாக்கள் கேட்கப்படும். தேர்வு 2 மணி நேரம் நடைபெறும்.

விண்ணப்பிக்கும் முறை: இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் https://csir.cbtexamportal.in/ என்ற இணையதள பக்கத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ 500. இருப்பினும் பெண்கள், எஸ்.சி, எஸ்.டி பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் இல்லை.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 12.01.2024

இது தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://www.csir.res.in/sites/default/files/2023-12/Detail%20%20Advt.%20-%2008.12.2023.pdf என்ற இணையதள பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பாணையை பார்வையிடவும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Jobs
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment