தேசிய தேர்வு நிறுவனம், அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில் (சி.எஸ்.ஐ.ஆர்) பல்கலைக்கழக மானியக் குழுவின் (யு.ஜி.சி) தேசிய தகுதி தேர்வு (நெட்) டிசம்பர் 2019 முடிவுகள் இன்று புதன்கிழமை வெளியிட வாய்ப்புள்ளது. அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கிடைக்கும் தகவல்கள்படி தேர்வு முடிவுகள் வெளியானால் மதிப்பெண்களும் இன்றே அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரஜினி – கமலின் கலவையே தனுஷ் – தெறிக்கும் பட்டாஸ்…
ஜூனியர் ரிசர்ச் ஃபெல்லோஷிப் (ஜே.ஆர்.எஃப்-நெட்) விருதுக்கு தகுதி பெற்றவர்கள் மற்றும் இரண்டாவது, விரிவுரையாளர்களுக்கான தகுதித் தேர்வு (எல்.எஸ்-நெட்) / உதவி பேராசிரியர் பதவிக்கு தகுதி பெற்றவர்கள் என இரண்டு தனித்தனி தகுதி பட்டியல்கள் இன்று அறிவிக்கப்படும். தேர்வு முடிவுகள்அதிகாரப்பூர்வ வலைதளமான https://csirnet.nta.nic.in/
இணையதளத்தில் கிடைக்கும். தேர்வு எழுதிவிட்டு முடிவுகளுக்காக காத்திருப்பவர்கள் தேர்வு முடிவுகளைக் காண இந்த இணைப்பைக் கிளிக் செய்யவும்.
ஜே.ஆர்.எஃப் (நெட்)-க்கு தகுதிபெறும் விண்ணப்பதாரர்கள் யு.ஜி.சி வகுத்துள்ள தகுதி நிபந்தனைகளை பூர்த்தி செய்வதற்கு உட்பட்டு விரிவுரையாளர்/ உதவி பேராசிரியர் பதவிக்கு (நெட்) தகுதி பெறுவார்கள்.
விரிவுரையாளர் / உதவி பேராசிரியர் பதவிக்கு தகுதிபெறும் விண்ணப்பதாரர்கள் விரிவுரையாளர்களாக ஆட்சேர்ப்பு செய்வதற்கும், ஒரு திட்டம் / திட்டத்தில் இளநிலை ஆராய்ச்சி பெல்லோஷிப்பிற்கும் பொருத்தமானவர்களாக கருதப்படுவார்கள். இருப்பினும், அவர்கள் வழக்கமான JRF, NET பெல்லோஷிப்பிற்கு தகுதி பெற மாட்டார்கள்.
ஜே.ஆர்.எஃப் (நெட்) விருதுக்கு தகுதி பெற்றவர்கள் சி.எஸ்.ஐ.ஆர்.இடமிருந்து தங்கள் வேலையின் படி அல்லது அவர்கள் அசோசியேஷன் காணக்கூடிய திட்டங்களிலிருந்து பெல்லோஷிப்பைப் பெறுவார்கள்.
சி.எஸ்.ஐ.ஆர் திட்டத்தின் கீழ் ஜூனியர் ரிசர்ச் ஃபெல்லோஷிப்பிற்கு தகுதியானவர்கள் என அறிவிக்கப்பட்டவர்கள் மற்றும் விரிவுரையாளர் / உதவி பேராசிரியர் பதவிகள் சி.எஸ்.ஐ.ஆர் விதிகள் / ஒழுங்குமுறைகளால் நிர்வகிக்கப்படும்.
கூட்டு சி.எஸ்.ஐ.ஆர்-யு.ஜி.சி நெட் தேர்வை தேசிய தேர்வு நிறுவனம் (என்.டி.ஏ) டிசம்பர் 15, 2019 அன்று மற்றும் “அசாம்” மற்றும் “மேகாலயா” மாநிலங்களில் 2019 டிசம்பர் 27 அன்று நடத்தியது.
கூட்டு சி.எஸ்.ஐ.ஆர்-யு.ஜி.சி நெட் தேர்வு தற்காலிக விடைகள் ஜனவரி 1, 2020 அன்று வெளியிடப்பட்டது. தற்காலிக விடைகளுக்கு எதிரான ஆட்சேபனைகள் ஜனவரி 3, 2020 அன்று இரவு 11:50 மணி வரை ஏற்றுக்கொள்ளப்பட்டன.