அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சிலின் (CSIR) கீழ் செயல்படும் சென்னையில் உள்ள கட்டமைப்பு பொறியியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 52 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணியிடங்கள் தற்காலிக நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியுள்ளவர்கள் நேர்முகத் தேர்வில் நேரடியாக கலந்துக் கொள்ளலாம்.
Senior Administrative Assistant
காலியிடங்களின் எண்ணிக்கை: 7
கல்வித் தகுதி: இளநிலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி: 50 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 18,000
Project Assistant
காலியிடங்களின் எண்ணிக்கை: 7
கல்வித் தகுதி: டிப்ளமோ அல்லது இன்ஜினியரிங் படித்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி: 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 20,000
Project Associate I
காலியிடங்களின் எண்ணிக்கை: 14
கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் BE. / B.Tech படித்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி: 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 25,000 – 30,000
Project Associate II
காலியிடங்களின் எண்ணிக்கை: 23
கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் BE. / B.Tech படித்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி: 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 28,000 – 35,000
தேர்வு முறை: இந்த பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தகுதியுள்ளவர்கள் கீழ்கண்ட முகவரியில் நடைபெறும் நேர்முகத் தேர்வில் கலந்துக் கொள்ளலாம்.
முகவரி: SERC, Chennai
நேர்முகத் தேர்வு நடைபெறும் நாள்: 22.07.2024 மற்றும் 23.07.2024
இது தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://serc.res.in/ என்ற இணையதள பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பாணையை பார்வையிடவும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“