மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு கடந்த ஆண்டை விட ஆறு லட்சத்திற்கும் அதிகமானோர் வின்னப்பித்திருந்தாக சிபிஎஸ்சி தெரிவித்துள்ளது.
இந்தியாவின் ஆர்.டி.இ சட்டத்தின் படி, ஒருவர் ஒன்று முதல் எட்டாம் வகுப்புகளில் ஆசிரியராக வேண்டும் என்றால் அவர் கட்டாயம் தகுதி தேர்வில் தேர்சிப்பெற்றிருக்க வேண்டும்.
இந்த ஆயரியர் தகுதி தேர்வை சமந்தப்பட்ட மாநிலங்களும், மத்திய இடைக் கல்வி வாரியமான சிபிஎஸ்சி யும் நடத்தி வருகின்றன. சிபிஎஸ்சி நடத்தும் தேர்வின் பெயர் சிடெட் (CTET) என்று அழைகப்படுகிறது. மாநில அரசு நடத்தும் தேர்வின் பெயர் டெட்(TET) என்றும் அழைக்கப்படுகிறது.
CTET December 2019 Notification: மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு அறிவிப்பு, அரிய வாய்ப்பு
இந்த நிலையில், அருணாச்சல பிரதேசம், மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகாலாந்து, கர்நாடகா, ஜம்மு-காஷ்மீர், மற்றும் கோவா போன்ற மாநிலங்கள் டெட் தேர்வை நடத்தி ஆசிர்யர்களை தேர்ந்தெடுப்பதற்கு பதிலாக சிடெட் தேர்வின் முடிவின் வைத்தே காலி இடங்களை பூர்த்தி செய்து வருகின்றன.
அதையும் தாண்டி, சிடெட் தகுதி தேர்வில் தேர்ச்சி அடைந்தால் மாநில மற்றும் மத்திய அரசு சார்ந்த (கே.வி.எஸ், என்.வி.எஸ், மத்திய திபெத்திய பள்ளி) பள்ளிகளில் ஆசிரியர் பணி கிடைக்க வாய்ப்பு இருப்பதால் சிடெட் தேர்வுகளுக்கே முன்னுரிமைக் கொடுக்கின்றனர்.
முடிவுகள் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து ஏழு ஆண்டுகள் வரை மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு (சிடெட் ) சான்றிதழ் செல்லுபடியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.