CBSE Announced CTET December 2019 exam date @ctet.nic.in: மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு தேதி அறிவிக்கப்பட்டிருக்கிறது. டிசம்பர் 8-ம் தேதி அந்தத் தேர்வு நடைபெறும் என சிபிஎஸ்இ கூறியிருக்கிறது. நாடு முழுவதும் 110 நகரங்களில் 20 மொழிகளில் இந்தத் தேர்வு நடைபெறும். மத்திய அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் பணி பெறும் இந்த அரிய வாய்ப்பை தகுதியானவர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.
மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான விரிவான அறிவிப்பாணை ஆகஸ்ட் 19-ம் தேதி வெளியாகும். அதில் தேர்வு பாடத்திட்டம், தேர்வு நடைபெறும் நகரங்கள், தேர்வுக் கட்டணம் உள்ளிட்ட அனைத்து அம்சங்களும் இடம் பெறும். எனவே ஆகஸ்ட் 19-ம் தேதி முழுத் தகவல்களையும் அதிகாரபூர்வ இணையதளமான ctet.nic.in -ல் காணலாம்.
CTET December 2019 Notification
CTET December 2019 Important Dates: மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு அறிவிப்பாணை
விண்ணப்ப நடைமுறை ஆகஸ்ட் 19-ம் தேதி தொடங்குகிறது. ஆன் லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள் செப்டம்பர் 18 ஆகும். ஆன் லைன் விண்ணப்பக் கட்டணம் செலுத்த கடைசி நாள் செப்டம்பர் 23. மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான அதிகாரபூர்வ இணையதளமான ctet.nic.in -ல் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
CTET Exam application : சிடெட் தேர்வு முக்கியத்துவம் பெறுவது ஏன்?
சில குறிப்புகள்:
மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு அறிவிப்பாணை (சிடெட் நோட்டிபிகேஷன்) வெளியாகும் தேதி: ஆகஸ்ட் 19
ஆன் லைன் விண்ணப்பம் தொடக்கம்: ஆகஸ்ட் 19, 2019
விண்ணப்பிக்க கடைசி நாள் : செப்டம்பர் 18
விண்ணப்பக் கட்டணம் செலுத்த கடைசி நாள்: செப்டம்பர் 23
தேர்வு தேதி: டிசம்பர் 8
இந்த வாய்ப்பை தகுதியானவர்கள் தவறாமல் பயன்படுத்திக் கொள்ளலாம்.