மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் நடத்தும் சிடெட் (CTET) தேர்வுக்கான அட்மிட் கார்ட்டை சிபிஎஸ்இ தற்போது வெளியிட்டுள்ளது. தேர்வெழுதும் பயனர்கள் ctet.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு தங்களது அட்மிட் கார்டை பதிவு இறக்கம் செய்து கொள்ளலாம்.
இந்த, சிடெட் தேர்வு ஆசிரியர் தகுதித் தேர்வு 2019 டிசம்பர் 8, ஞாயிற்றுக்கிழமை நடத்தப்படுகிறது.அன்று காலை 9:30 மணி முதல் 12:30 மணி வரை முதல் தாள் தேர்வு நடைபெறும், மதியம் 2 மணி முதல் மாலை 4:30 மணி இரண்டாம் தாளுக்கான தேர்வு நடத்தப்படும்.
1 முதல் 5 ஆம் வகுப்பு வரை கற்பிக்க விரும்பும் ஆசிரியர்கள் காலையில் நடக்கும் முதல் தாள் தேர்வை எழுத வேண்டும். மதியம் நடக்கும் இரண்டாம் தாளில் தேர்வு பெறுபவர்கள் ஆறு மற்றும் ஏழாம் வகுப்புகளுக்கு கற்பிக்கும் தகுதியடைவார்கள். இந்த மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு நாடு முழுவதும் 110 நகரங்களில் 20 மொழிகளில் நடத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
அட்மிட் கார்ட்டை பதிவு இறக்கம் செய்வது எப்படி ?
ஸ்டேப் 1 : ctet.nic.in என்ற இணையதளத்திற்கு செல்லேவேண்டும் (அல்லது) இந்த லிங்கை கிளிக் செய்யவும்.
ஸ்டேப் 2 : அட்மிட் கார்ட் டவுன்லோட் செய்வதற்கான டேட்டாக்களை நிரப்புங்கள்.
ஸ்டேப் 3 : டேட்டாக்களை நிரப்பிய பின்பு, அட்மிட் கார்டை உங்கள் கணினியில் பத்திரப்படுத்தி வைத்துக் கொள்ளுங்கள்.
இந்தியாவின் ஆர்.டி.இ சட்டத்தின் படி, ஒருவர் ஒன்று முதல் எட்டாம் வகுப்புகளில் ஆசிரியராக வேண்டும் என்றால் அவர் கட்டாயம் தகுதி தேர்வில் தேர்சிப்பெற்றிருக்க வேண்டும். இந்த ஆயரியர் தகுதி தேர்வை சமந்தப்பட்ட மாநிலங்களும், மத்திய இடைக் கல்வி வாரியமான சிபிஎஸ்சி யும் நடத்தி வருகின்றன. சிபிஎஸ்சி நடத்தும் தேர்வின் பெயர் சிடெட் (CTET) என்று அழைகப்படுகிறது. மாநில அரசு நடத்தும் தேர்வின் பெயர் டெட்(TET) என்றும் அழைக்கப்படுகிறது.