மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான (சிடெட் ) பதிவு செய்யும் நிகழ்வை மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) ஆரம்பித்துள்ளது. தேர்வு எழுத விரும்பும் தேர்வர்கள் தங்களது ஆன்லைன் விண்ணப்பத்தை அதிகாரப்பூர்வ வலைத்தளமான ctet.nic.in இல் பூர்த்தி செய்யலாம்.
ஆன்லைன் விண்ணப்ப படிவங்கள் செப்டம்பர் 18 வரை கிடைக்கும்.கவனாமாக, ஆன்லைனில் தேர்வர்கள் விண்ணப்பத்தை பூர்த்தி செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
தேர்வுக் கட்டணங்கள் பின் வருமாறு:
தேர்வு நடக்கும் முறை:
டிசம்பர் எட்டாம் தேதி நடக்கவிருக்கும் இந்த தேர்வு காலை,மதியம் என இரண்டு ஷிப்ட் களாக நடைபெற இருக்கிறது. ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான ஆசிரயர் தேர்வுக்கான பேப்பர்-1 காலையில் நடைபெறும்.
பேப்பர் I (வகுப்புகள் I முதல் V வரை) கேள்வித் தாள்கள் விதம் :
(i) Child Development and Pedagogy 30 MCQs 30 Marks
(ii) Language I (compulsory) 30 MCQs 30 Marks
(iii) Language II (compulsory) 30 MCQs 30 Marks
(iv) Mathematics 30 MCQs 30 Marks
(v) Environmental Studies 30 MCQs 30 Marks
Total 150 MCQs 150 Marks
ஆறு முதல் எட்டாம் வகுப்பு(VI-VII) வரையிலான ஆசிரயர் தேர்வுக்கான பேப்பர் II மாலையில் நடைபெறும்.
(i) Child Development & Pedagogy(compulsory) 30 MCQs 30 Marks
(ii) Language I (compulsory) 30 MCQs 30 Marks
(iii) Language II (compulsory) 30 MCQs 30 Marks
(iv) Mathematics and Science 60 MCQs 60 Marks
(for Mathematics and Science teacher)
OR
(v) Social Studies/Social Science 60 MCQs 60 Marks
(for Social Studies/Social Science teacher)
*For any other teacher - either (IV) or (V)
Total 150 MCQs 150 Marks
I-V மற்றும் VI-VII வகுப்புகளுக்கு பாடம் எடுக்கு விரும்பும் தேர்வர்கள் இரண்டு பேப்பர்களையும் எழுத வேண்டும்.
முடிவுகள் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து ஏழு ஆண்டுகள் வரை மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு (சிடெட் ) சான்றிதழ் செல்லுபடியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.