மத்திய இடைநிலைக் கல்வி வாரியம், மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு (CTET) 2021 க்கான தேர்வு தேதிகளை அறிவித்துள்ளது. அறிவிப்பின் படி, CTET தேர்வு டிசம்பர் 16, 2021 முதல் ஜனவரி 13, 2022 வரை நடைபெறும். இது தொடர்பான விரிவான அட்டவணை நாளை (செப்டம்பர் 20) முதல் மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்படுகிறது (ctet.nic.in).
CBSE, கணினி அடிப்படையிலான தேர்வு முறையில் மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வின் (CTET) 15 வது பதிப்பை நடத்தவுள்ளது. நாடு முழுவதும் 20 மொழிகளில் இந்த தேர்வு நடைபெறும்.
விண்ணப்பிக்கும் முறை
CTET டிசம்பர் தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்ப செயல்முறை செப்டம்பர் 20 ஆம் தேதி தொடங்குகிறது. விண்ணப்பிக்க கடைசி தேதி அக்டோபர் 19, 2021, இரவு 11:59. விண்ணப்பதாரர்கள் அக்டோபர் 20, மாலை 3:30 மணிக்குள் விண்ணப்பக் கட்டணத்தை செலுத்தலாம்.
விண்ணப்பக் கட்டணம்
பொது மற்றும் ஓபிசி விண்ணப்பதாரர்களுக்கான விண்ணப்பக் கட்டணம் ஒரு தாளுக்கு (paper) ரூ .1000 மற்றும் இரண்டு தாள்களுக்கும் ரூ .1200. SC/ ST/ PwD விண்ணப்பதாரர்களுக்கு, ஒரு தாளுக்கு விண்ணப்ப கட்டணம் ரூ. 500 மற்றும் இரண்டு தாள்களுக்கும் ரூ. 600.
தேர்வு முறை
சிபிஎஸ்இ ஜூலை 2021 இல் மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு (சிடிஇடி) 2021 தேர்வின் தேர்வு முறை மாற்றங்கள் குறித்த அறிவிப்பை வெளியிட்டது. அதிகாரப்பூர்வ அறிவிப்பின் படி, கேள்வித்தாள் குறைவான உண்மை அறிவு (less factual knowledge) மற்றும் கருத்தியல் புரிதல் (conceptual understanding), பயன்பாடு (application), சிக்கல்களை தீர்த்தல் (problem-solving), பகுத்தறிவு (reasoning) மற்றும் விமர்சன சிந்தனை (critical thinking) ஆகியவற்றை மதிப்பிடும் வகையில் உருவாக்கப்படும்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil