/tamil-ie/media/media_files/uploads/2019/02/CTET-exam.jpg)
CTET December 2019 admit card
CTET July 2019 Application Process Begins: சி.பி.எஸ்.இ பள்ளிகளில் பணி புரிவதற்கான சென்ட்ரல் டீச்சர் எலிஜிபிலிட்டி டெஸ்ட் எனப்படும் சி.டி.இ.டி தேர்வுக்கான அறிவிப்பை சி.பி.எஸ்.இ கல்வி நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
இதன் தேர்வு ஜூலை 7, 2019 ஞாயிற்றுக்கிழமை நடக்கிறது. இந்தியா முழுக்க 20 மொழிகளில், மொத்தம் 97 நகரங்களில் இத்தேர்வு நடக்கிறது. தமிழகத்தைப் பொறுத்தவரையில், சென்னை, கோவை, மதுரை மற்றும் திருச்சி ஆகிய நான்கு முக்கிய நகரங்களில் சி.டி.இ.டி தேர்வு நடக்கிறது.
பிப்ரவரி 5, 2019 முதல், மார்ச் 5, 2019 வரை ctet.nic.in என்ற தளத்தில் இந்த சி.டி.இ.டி தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.
இதற்கான ஹால்டிக்கெட்டை ctet.nic.in தளத்தில் பதிவிறக்கம் செய்துக் கொள்ள வேண்டும். தேர்வெழுத செல்லும் போது, பான் கார்டு, ரேஷன் கார்டு, ஆதார், லைசென்ஸ், பாஸ்போர்ட் இவற்றில் ஏதாவது ஒன்றினை கட்டாயம் எடுத்துச் செல்ல வேண்டும்.
மேலும் தகவல்களுக்கு ctet.nic.in தளத்தை அணுகவும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.