பாபு ராஜேந்திரன் - கடலூர் மாவட்டம்
ஆவின் பொது மேலாளர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கடலூர் மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியத்திற்கு உட்பட்ட மாவட்டம் முழுவதுமான பகுதிகளில்பால் விற்பனை நாளொன்றுக்கு 42,000 லிட்டரும் மற்றும் பால் உபபொருட்கள் விற்பனை மாதம் ஒன்றுக்கு 50 லட்சம் ரூபாய் அளவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
அவ்வகையில், 207 முகவர்கள்மற்றும்15 மொத்த விற்பனை முகவர்கள் மொத்தம் 222 நபர்கள் இவ்வொன்றிய முகவர்களாக செயல்பட்டு வருகின்றனர். இந்நிலையில், இவ்வொன்றியத்தின் மூலம் விற்பளை செய்யப்படும் ஐஸ்கிரீம்வகைகள், குல்பி, மில்க்ஷேக் / நறுமண பால் , பாதாம் பவுடர் நெய் மைசூர்பா, குலோப்ஜாமுன், ரசகுல்லா, பால்கோவா, நெய், வெண்னை, பிஸ்கேட், குக்கீஸ், தயிர், மோர், குக்கீஸ், பிஸ்கட், சாக்லெட் மற்றும் இருநூறுக்கும் மேற்பட்ட பால் உபபொருட்கள் பொதுமக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று குழந்தைகள் முதல் முத்த குடிமக்கள் வரை விருப்பத்தோடு பயன்படுத்தி வருகின்றனர்.
மேலும், ஆவின் பால் வகைகளான சமன்படுத்தப்பட்ட பால், டிலைட் பால் மற்றும் நிறை கொழுப்பு பால் போன்றவை தனியார் நிறுவனங்களை காட்டிலும் ஆவின் பால் வகைகள் விலை மிகவும் குறைவாகவும், தரமாகவும் உள்ளது. அதோடு, பால் உபபொருட்களும் பிற நிறுவனங்களைவிட விலை குறைவாகவும் மற்றும் தரத்தில் சிறந்ததாக விளங்குகிறது. அவ்வாறு இருக்கும் சூழ்நிலையில் கீழ்கண்ட பகுதிகளுக்கு ஆவின் முகவர்கள்,மொத்த விற்பனையாளர்கள் மற்றும் பாலக முகவர்கள் உடனடியாக தேவைப்படுகிறது.
கடலூர், சிதம்பரம், விருத்தாசலம், பண்ருட்டி, வடலூர், நெய்வேலி, காட்டுமன்னார்கோயில், ஸ்ரீமுஷ்ணம், வேப்பூர், பெண்ணாடம், திட்டக்குடி, குறிஞ்சிப்பாடி மற்றும் புவனகிரி. எனவே, மேற்கண்ட பகுதிகளில் உள்ள பொதுமக்கள் ஆவின் முகவர்கள்,மொத்த விற்பனையாளர்களாகவும் மற்றும் பாலக முகவர்களாகவும் செயல்பட விரும்பும் விருப்பமுள்ள நபர்கள் கடலூர் மாவட்ட கூட்டுறவு பால்உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியத்திற்கு நேரில் வருகை தந்து தங்களுக்கு தேவையான விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து வழங்கிட கேட்டுகொள்ளப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“