இந்திய விமானப்படை நேரடி ஆட்சேர்ப்பில் கலந்த கொள்ள விரும்புவர்கள், குறிப்பிட்ட தேதியில் கலந்துக் கொள்ளுமாறு கடலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் .சிபி ஆதித்யா செந்தில் குமார் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக கடலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் .சிபி ஆதித்யா செந்தில் குமார் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது;
இந்திய விமானப்படை நேரடி ஆட்சேர்ப்புக்கான தேர்வு 8 ASC Air Force Station, தாம்பரம், சென்னை -600046 (Air Force Road) தாம்பரம் இரயில்வே நிலையம் அருகில் என்ற முகவரியில் 02.09.2025 அன்று காலை 4.00 மணி முதல் ஆண்களுக்கும் மற்றும் 05.09.2025 அன்று காலை 5.00 மணி முதல் பெண்களுக்கும் நடத்தப்பட உள்ளது.
இதற்கான கல்வித் தகுதி 12 ஆம் வகுப்பில் 50 சதவீதம் மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் மற்றும் ஆங்கிலம் பாடப்பிரிவில் 50 சதவீதம் மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
மேலும் இந்த ஆட்சேர்ப்பில் பங்குபெற 01.01.2026 அன்று 17 1/2 வயதிற்கு மேல் மற்றும் 21 வயதிற்குள் இருத்தல் வேண்டும். மேலும் விவரங்களுக்கு www.agnipathvayu.cdac.in என்ற இணையதளத்தை அணுகலாம். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில் குமார் அந்த அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.