பாபு ராஜேந்திரன் - கடலூர் மாவட்டம்
கடலூர் மாவட்டத்தில் உள்ள பீங்கான் தொழிற்பயிற்சி கல்லூரியை சேர்வதற்கான தேதி ஜூலை 30 வரை நீடிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் சி.பி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக கடலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் சி.பி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்ததாவது:-
கடலுார் மாவட்டம் விருத்தாசலம் ஜங்ஷன் ரோடு மற்றும் ஆலடி ரோடு இணைப்பில் அமைந்துள்ள அரசு பீங்கான் தொழில்நுட்பக் கல்லுாரி ஆனது தமிழ்நாட்டிலேயே செராமிக் தொழில் நுட்பத்தில் டிப்ளமோ வழங்கும் ஒரே கல்லுாரிஆகும். இது மூன்றரை வருட டிப்ளமோ படிப்பு ஆகும்.
மூன்று வருட கல்லுாரி படிப்பு முடிந்தததும் மாணவர்களுக்கு தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்களில் உள்ள செயின்ட் கோபெயின் கிளாஸ், செயின்ட் கோபெயின் ரெப்ராக்ட்ரி, கார்போரண்டம் யுனிவர்சல், அனுஜ் டைல்ஸ், ஜாகுவார் செராமிக்ஸ், பேரிவேர், சாரதா செராமிக்ஸ் போன்ற மிகச் சிறந்த கம்பெனிகளில் ஆறு மாத தொழிற்சாலை பயிற்சி வழங்கப்படுகிறது.
இந்ததொழிற்சாலை பயிற்சியின் போது குறைத் பட்ச உதவித்தொகை ரூபாய் 7000/- ஆக நிர்ணயம் செய்யப்பட்டு மாணவர்களுக்கு ஏழாவது செமஸ்டர் முதலே வழங்கப்பட்டு வருகிறது. தொழிற்சாலை பயிற்சி முடிந்தவுடன் அனைத்து மாணவர்களுக்கும் வேலை வாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது.
தமிழ்நாட்டிலேயே செராமிக் தொழில்நுட்ப பட்டய படிப்பு இக்கல்லுாரியில் மட்டுமே வழங்கப்படுவதால் செராமிக் கம்பெனிக்கு தேவைப்படும் மாணவர்கள் இக்கல்லுாரியில் இருந்து மட்டுமே தேர்வு செய்யப்படுகிறார்கள். எனவே, 100% வேலை வாய்ப்பு மூன்றரை வருட பட்டய படிப்பு முடிந்த உடனே மாணவர்களுக்கு கிடைக்கிறது.
மேலும், ஆன்லைக் அல்லது ஆப்லைன் கேம்பஸ் இன்டர்வியூ மூலம் ராக் செராமிக்ஸ் உள்ளிட்ட வெளிநாட்டு கம்பெனிகளிலும் மிகச்சிறந்த உள்நாட்டு கம்பெனிகளிலும் வேலைவாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது. மேற்படிப்பு படிக்க விரும்பும் மாணவர்களுக்கு சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழகத்தில் செராமிக் தொழில்நுட்பத்தில் பட்டப்படிப்பு வழங்கப்படுகிறது.
விருத்தாசலம் செராமிக் தொழிற்பேட்டையுடன் கூடிய கல்லுாரி என்பதால், மூன்று வருட கல்லுாரி படிப்பு கற்றுத் தரப்படும். செராமிக் தொழில் நுட்ப பாடங்களுக்கு ஏற்ப செய்முறை விளக்கங்கள் மாதம் இருமுறை செராமிக் கம்பெனிகளுக்கே அழைத்துச் செல்லப்பட்டு மாணவர்களுக்கு சிறப்பான முறையில் காண்பிக்கப்படுகிறது.
மேலும், அதிநவீன ஆய்வகங்கள், நவீன மாணவர் விடுதி, சுத்தமான குடிநீர், சுத்தமான நவீன கழிவறைகள் ஆகிய வசதிகள் உள்ளன. சுமார் 8 ஏக்கர் நிலப்பரப்பில் பசுமையாகவும் சுகாதாரமாகவும் இக்கல்லுாரி வளாகம் பராமரிக்கப்பட்டு வருகிறது. திறமையான அனுபவம் மிக்க பேராசிரியர்கள் அனைத்து பாடங்களுக்கும் நியமிக்கப்பட்டு மிகச் சிறப்பான முறையில் மாணவர்களுக்கு தொழில்நுட்ப கல்வி வழங்கப்பட்டு வருகிறது.
நுாறு சதவீத வேலைவாய்ப்பு உத்தரவாதத்துடன் வழங்கப்பட்டு வரும் இக்கல்லுழரியில் முதலாம் ஆண்டில் மாணவர் சேர்க்கை 30.07.2024 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருப்பது மாணவர் சேர்க்கைக்கான தகுதியாகும். தகுதியான மாணவர்கள் இக்கல்லுாரிக்கு ஜீலை மாதம் 30 ஆம் தேதிக்குள் நேரில் வந்தால் உடனே ஸ்பாட் அட்மிஷன் மூலம் சேர்க்கை அளிக்கப்படும். கல்லுாரி கட்டணம் வருடத்திற்கு ரூபாய் 2070/-மட்டுமே ஆகும்.
இந்த கட்டணம் மற்றும் தேர்வு கட்டணம் அனைத்தையும் சேர்த்து கல்வி உதவித் தொகையாக பெற்றுக் செ வழிவகை செய்யப்பட்டுள்ளது. எனவே, படிக்கும் பொழுதே ரூபாய் 7000/- தொகையுடன் தொழிற்சாலை பயிற்சியும் அளிக்கப்பட்டு முடிந்தவுடன் 100% அனைத்து மாணவர்களுக்கும் வேலை வாய்ப்பு வழங்கப்பட்டு வருகின்ற இந்த அரசு பீங்கான் தொழில்நுட்ப கல்லுாரியில் மாணவர்கள் சேர்ந்து பயன் அடைந்து தங்கள் வாழ்க்கையை முன்னேற்றிக் கொள்ளுமாறு தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“