/indian-express-tamil/media/media_files/2025/10/25/cuddalore-dist-collector-sibi-adhithya-senthil-kumar-on-324-students-not-attending-quarterly-exam-tamil-news-2025-10-25-18-32-46.jpg)
கடலூர் மாவட்ட ஆட்சியர் சி.பி ஆதித்யா செந்தில்குமார் தலைமையில் 12 ஆம் வகுப்பு மாணவர்களின் காலாண்டு தேர்வு தேர்ச்சி தொடர்பான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் 12ஆம் வகுப்பு மாணவர்களின் காலாண்டு தேர்வு தேர்ச்சி தொடர்பாக மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமையில் தலைமையாசிரியர்கள் மற்றும் துறை அலுவலர்களுடன் இன்று (25.10.2025) ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
அப்போது மாவட்ட ஆட்சியர் சி.பி ஆதித்யா செந்தில்குமார் பேசுகையில், "2025-26 ஆம் கல்வியாண்டில் கடலூர் மாவட்டத்தில் 75 அரசுப் பள்ளிகளில் 12 ஆம் வகுப்பில் 11,894 மாணவர்கள் பயின்று வருகின்றனர். அதில் காலாண்டு தேர்வில் 11,570 மாணவர்கள் தேர்வு எழுதி உள்ளனர். 324 மாணவர்கள் தேர்விற்கு வரவில்லை. 10,150 மாணவர்கள் முழு தேர்ச்சியும், 1420 மாணவர்கள் குறைவான மதிப்பெண்களும் பெற்றுள்ளனர்.
காலாண்டு பொதுத் தேர்வு எழுதாத மாணவர்களின் எண்ணிக்கை, ஒரு பாடம் மற்றும் இரண்டு பாடங்களில் குறைவான மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை, கூடுதலாக தேர்ச்சி பெறாத மாணவர்களின் எண்ணிக்கை, குறைந்த மதிப்பெண் சதவீதம் பெற்ற பள்ளிகளின் எண்ணிக்கை மற்றும் அதற்கான காரணங்கள் குறித்து தலைமையாசிரியர்களுடன் விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தை உயர்த்துவதற்காக இனிவரும் காலங்களில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள், திட்டமிடுதல், கூடுதல் கண்காணிப்பு, சிறப்பு வகுப்புகள் நடத்துதல், தேர்ச்சி பெறாதாதற்கான காரணங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தப்பட்டள்ளது. மாணவர்களின் கற்கும் திறனை மேம்படுத்திடவும், மொழிதிறன்களை வளர்த்திடவும் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். நடுவுல கொஞ்சம் கற்றலைத் தேடி திட்டத்தின் மூலம் கல்வித்திறன், மாணவர்களின் கற்கும் திறன் மேம்பாடு குறித்தும், திட்ட விரிவாக்கம் செய்திட மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள் குறித்து ஆசியர்களிடம் கலந்தாய்வு செய்யப்பட்டது
12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தினை உயர்த்துவதற்காகவும், 100 சதவீதம் தேர்ச்சி என்ற இலக்கினை அடைவதற்காகவும், மாணவர்கள் தினசரி பள்ளிக்கு வருகை புரிவதை கண்காணித்திடவும், பாடம் வாரியாக மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்திடவும் மாவட்ட நிருவாகத்தின் சார்பில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மேலும், இப்பணிகளை துரிதமாக மேற்கொள்வதற்காக பல்வேறு துறை சார்ந்த அலுவலர்களை பொறுப்பு அலுவலர்களாக நியமித்து கண்காணிப்பு பணியில் ஈடுப்பட்டு வருகின்றனர்" என்று அவர் தெரிவித்தார்.
இந்தக் கூட்டத்தின் போது, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அ.எல்லப்பன், மாவட்ட கல்வி அலுவலர்கள், தலைமையாசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
செய்தி: பாபு ராஜேந்திரன் - கடலூர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us