கடலூர் மாவட்ட சுகாதாரத்துறையில் பல்வேறு காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. டிப்ளமோ படித்தவர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
கடலூர் மாவட்ட பொது சுகாதாரத்துறையின் கீழ் உள்ள அரசு மருத்துவமனைகளில் செவிலியர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 2 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 03.01.2023க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.
இதையும் படியுங்கள்: சுகாதாரத் துறை வேலை வாய்ப்பு; 10-ம் வகுப்பு தகுதி; உடனே விண்ணப்பிங்க!
செவிலியர் (Staff Nurse - Trauma Registry)
காலியிடங்களின் எண்ணிக்கை : 2
கல்வித் தகுதி : Diploma/ Degree in Nursing படித்திருக்க வேண்டும். கணினி இயக்க தெரிந்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி : 35 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம் : ரூ. 14,000
தேர்வு செய்யப்படும் முறை : இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://cdn.s3waas.gov.in/s3a96b65a721e561e1e3de768ac819ffbb/uploads/2022/12/2022121613.pdf என்ற இணையதளப் பக்கத்தில் அறிவிப்புக்குக் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து பிரிண்ட் எடுத்துக் கொள்ளுங்கள். பின்னர் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
முகவரி : உறுப்பினர்/ இணை இயக்குனர், மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள மற்றும் குடும்ப நலம், மாவட்ட நலவாழ்வுச் சங்கம், கடலூர் மாவட்டம்.
விண்ணப்பிக்க கடைசி தேதி : 03.01.2023
இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://cdn.s3waas.gov.in/s3a96b65a721e561e1e3de768ac819ffbb/uploads/2022/12/2022121613.pdf என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பைப் பார்வையிடவும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.