கடலூர் மாவட்ட சமூக நலத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் வழக்குப் பணியாளர் பணியிடத்தை நிரப்ப வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணியிடம் தற்காலிக நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 25.11.2024க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.
வழக்குப் பணியாளர்
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி: சமூகப்பணி, ஆலோசனை, மனநலம், குழந்தைகள், பெண்கள் மேம்பாடு/ நிர்வாக மேம்பாட்டில் இளங்கலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். மேலும் 2 வருட பணி அனுபவம் உடையவராக இருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 18,000
தேர்வு செய்யப்படும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://cdn.s3waas.gov.in/s3a96b65a721e561e1e3de768ac819ffbb/uploads/2024/11/2024111165.pdf என்ற இணையதளப் பக்கத்தில் கொடுப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
முகவரி: மாவட்ட சமூக நல அலுவலகம், அரசு சேவை இல்ல வளாகம், செம்மண்டலம், கடலூர் - 607001
விண்ணப்பிக்க கடைசி தேதி: 25.11.2024
இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://cdn.s3waas.gov.in/s3a96b65a721e561e1e3de768ac819ffbb/uploads/2024/11/2024111165.pdf என்ற இணையதளப் பக்கத்தைப் பார்வையிடவும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“