Advertisment

ஊர்க்காவல் படை வேலை வாய்ப்பு; 10-ம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்க அழைப்பு

கடலூர் மாவட்ட ஊர்க்காவல் படைக்கு விண்ணப்பிக்க அழைப்பு; தகுதி, தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை உள்ளிட்ட விபரங்கள் இங்கே

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Police pudu

கடலூர் மாவட்ட ஊர்க்காவல் படையில் சேர விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பம் அளிக்கலாம் என காவல்துறை கண்காணிப்பாளர் ராஜாராமன் தெரிவித்துள்ளார்.

Advertisment

இது குறித்து எஸ்.பி ராஜாராமன் வெளியிட்டுள்ள உள்ள செய்தி குறிப்பின்படி,

ஊர்க்காவல் படை காலியிடங்களின் எண்ணிக்கை – 19

விண்ணப்பதாரர்களின் கல்வித்தகுதி: 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

வயதுத்தகுதி: 20 - 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.

உயரம் 

ஆண்கள் - 167 சென்டிமீட்டர் 

பெண்கள் – 157 சென்டிமீட்டர்

கடலூர் மாவட்டத்தில் வசிப்பவராக இருக்க வேண்டும்

அரசு ஊழியராக இருப்பின் அவர் தம் துறை அதிகாரியிடம் தடையில்லா சான்று பெற்று சமர்ப்பிக்க வேண்டும்.

எந்தவித குற்ற வழக்கிலும் ஈடுபட்டிருக்கக் கூடாது, சாதி, மத, அரசியல் மற்றும் எந்தவித சங்கத்திலும் உறுப்பினராக இருக்கக் கூடாது.

விண்ணப்பங்களை கடலூர் ஊர்க்காவல்படை அலுவலகத்தில் காலை 10.00 மணி முதல் 23.09.2024 மாலை 5 மணிக்குள் பெற்று பூர்த்தி செய்து உரிய ஆவணங்களை இணைத்து (10-ம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் நகல், ஆதார் அட்டை நகல் அவசியம்) கடலூர் மாவட்ட ஊர்க்காவல் படை அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். 

விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, கடலூர் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். இவர்களுக்கு 45 நாட்கள் அடிப்படை பயிற்சி வழங்கப்பட்டு. பணி அமர்த்தப்படுவார்கள். அவர்களுக்கு மாதத்திற்கு 5 நாட்கள் பணி வழங்கப்படும் (நாள் ஒன்றுக்கு ரூ.560 வீதம்) ஊதியம் ரூ.2800 வழங்கப்படும். காலதாமதமாக பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.

பாபு ராஜேந்திரன், கடலூர் 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Jobs Police
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment