புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் முதுநிலை படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி பல்கலைக்கழக மக்கள் தொடர்பு அதிகாரி மகேஷ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், பல்கலை கழகங்களில் முதுநிலை படிப்பிற்கு சேர்வதற்கான 'கியூட்' நுழைவுத் தேர்வு கடந்த ஜூன் 5 மற்றும் 6 ஆம் தேதிகளில் நடந்தது. அதன் முடிவுகளை தேசிய தேர்வு முகமை தற்போது வெளியிட்டுள்ளது.
இதையும் படியுங்கள்: புதுச்சேரி அரசு யூ.டி.சி தேர்வு; 136 இடங்களுக்கு 46000 பேர் போட்டி
அதில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் புதுச்சேரி பல்கலையில் உள்ள முதுநிலை பட்டம் மற்றும் பட்டய படிப்புகளில் சேர விண்ணப்பிக்கலாம். இதற்கான விண்ணப்பம் பல்கலைக்கழக இணைய முகவரியில் கிடைக்கும். மேலும் தகவல் குறிப்பேட்டையும் டவுன்லோடு செய்து கொள்ளலாம். விண்ணப்பங்களை இம்மாதம் 31 ஆம் தேதி மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil