/indian-express-tamil/media/media_files/WSu6hTdpwPU53QtUUWT1.jpg)
பொதுப் பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு (பிரதிநிதித்துவ எக்ஸ்பிரஸ் புகைப்படம்)
தேசிய தேர்வு முகமை (NTA) முதுகலை படிப்புகளுக்கான (CUET PG) பொதுப் பல்கலைக்கழக நுழைவுத் தேர்வுக்கான பதிவு செயல்முறையைத் தொடங்குகிறது. https://pgcuet.samarth.ac.in/ என்ற இணையதளப் பக்கத்தில் CUET PG விண்ணப்பப் படிவத்தை பதிவு செய்யலாம். CUET PG 2024 க்கு பதிவு செய்வதற்கான கடைசி தேதி ஜனவரி 24, 2024 ஆகும்.
NTA தேர்வு காலண்டரின் படி, CUET PG தேர்வு மார்ச் 11 முதல் மார்ச் 28, 2024 வரை நடத்தப்படும். கடைசி தேர்வின் மூன்று வாரங்களுக்குள் முடிவுகள் அறிவிக்கப்படும்.
CUET PG என்பது கணினி அடிப்படையிலான தேர்வு (CBT) ஆகும். இதற்கான கால அளவு 105 நிமிடங்கள். மொழிப் பாடம் மற்றும் சாகித்திய தாள்கள் தவிர ஆங்கிலம் மற்றும் இந்தியில் நடத்தப்படுகிறது.
CUET PG 2024 விண்ணப்ப படிகள்
படி 1: அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பார்வையிடவும் — https://pgcuet.samarth.ac.in/
படி 2: முகப்புப் பக்கத்தில் உள்ள CUET பதிவு இணைப்பைக் கிளிக் செய்யவும்.
படி 3: உங்கள் பெயர், மின்னஞ்சல் முகவரி மற்றும் தொலைபேசி எண் போன்ற விவரங்களை உள்ளிடவும்
படி 4: பதிவு செய்தவுடன், உங்கள் விண்ணப்ப எண் மற்றும் கடவுச்சொல்லைப் பயன்படுத்தி உள்நுழையவும்
படி 5: விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களை பதிவேற்றவும்
படி 6: சேமித்து, சமர்ப்பித்து, கட்டணத்தைச் செலுத்தவும்
படி 7: எதிர்கால குறிப்புக்காக CUET PG 2024 விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கவும்
கட்டண விவரம்
கடந்த ஆண்டை விட அனைத்து பிரிவினருக்கான பதிவு கட்டணத்தை தேசிய தேர்வு முகமை ரூ.200 உயர்த்தியுள்ளது. பொதுப் பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் ரூ. 1,200 மற்றும் OBC-NCL/Gen-EWS கீழ் உள்ளவர்கள் CUET PG 2024 க்கு பதிவு செய்யும் போது ரூ. 1,000 செலுத்த வேண்டும். கடந்த ஆண்டு கூடுதல் தேர்வுத் தாள்களுக்கு விண்ணப்பதாரர்கள் ரூ. 500 செலுத்த வேண்டியிருந்தது. இருப்பினும், இந்த ஆண்டு அவர்கள் எழுத விரும்பும் ஒவ்வொரு கூடுதல் தேர்வுத் தாள்களுக்கும் ரூ.600 செலுத்த வேண்டும். இந்தியாவிற்கு வெளியே இரண்டு தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் கூடுதல் தாள்களுக்கு ரூ.6,000 மற்றும் ரூ.2,000 செலுத்த வேண்டும். முன்னதாக, இது முறையே ரூ.5,000 மற்றும் ரூ.1,500 ஆக இருந்தது.
மதிப்பெண் முறை
ஒவ்வொரு கேள்விக்கும் நான்கு மதிப்பெண்கள் இருக்கும்.
ஒவ்வொரு சரியான பதிலுக்கும், விண்ணப்பதாரர் நான்கு மதிப்பெண்களைப் பெறுவார்.
ஒவ்வொரு தவறான பதிலுக்கும் மொத்த மதிப்பெண்ணிலிருந்து ஒரு மதிப்பெண் கழிக்கப்படும்.
பதிலளிக்கப்படாத அல்லது முயற்சிக்கப்படாத பதில்களுக்கு மதிப்பெண்கள் வழங்கப்படாது.
ஒரு கேள்விக்கு பதிலளிக்க, தேர்வர் ஒரு விருப்பத்தை சரியான விருப்பமாக தேர்வு செய்ய வேண்டும்.
விடைக் குறிப்பு சவால்களின் செயல்முறைக்குப் பிறகு, பல சரியான விருப்பங்கள் அல்லது பதில்களில் மாற்றம் இருந்தால், திருத்தப்பட்ட இறுதி விடை குறிப்பின்படி அதைச் சரியாக முயற்சித்த விண்ணப்பதாரர்களுக்கு மட்டுமே மதிப்பெண்கள் வழங்கப்படும்.
ஏதேனும் தொழில்நுட்பப் பிழை காரணமாக ஒரு கேள்வி கைவிடப்பட்டால், அதை முயற்சித்தவர் அல்லது முயற்சி செய்யாவிட்டாலும் அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் முழு மதிப்பெண்கள் வழங்கப்படும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.