CUET UG 2023: பல்கலைக்கழக மானியக் குழு (UGC) பொதுப் பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு, இளங்கலை (CUET-UG) தேர்வு மே 21 மற்றும் 31, 2023 க்கு இடையில் நடத்தப்படும் என்று அறிவித்துள்ளது. முழு அட்டவணை மற்றும் பதிவு செயல்முறை விரைவில் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்படும்.
UGC வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, CUET UGக்கான பதிவு பிப்ரவரி 2023 முதல் வாரத்தில் தொடங்கும் எனத் திட்டமிடப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள்: குருப்-2 முதன்மை தேர்வுக்கான பயிற்சி காணொலி வெளியீடு எப்போது? தமிழக அரசு தகவல்
CUET PGக்கான விண்ணப்பப் பதிவு தேதிகள் மற்றும் அட்டவணை அடுத்த வாரம் (டிசம்பர் கடைசி வாரம்) அறிவிக்கப்படும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. CUET-PG தேர்வு ஜூன் 2023 முதல் அல்லது இரண்டாவது வாரத்தில் நடத்தப்படும் என்று UGC அனைத்து துணைவேந்தர்களுக்கும் தெரிவித்துள்ளது.
இது தவிர, CUET UGக்கான முடிவுகள் ஜூன் 202 மூன்றாவது வாரத்தில் அறிவிக்கப்படும் என்றும், CUET பி.ஜி முடிவுகள் ஜூலை 2023 முதல் வாரத்தில் அறிவிக்கப்படும் என்றும் UGC அறிவித்துள்ளது.
அனைத்து துணைவேந்தர்களும் ஜூலை 2023க்குள் சேர்க்கை செயல்முறையை முடித்து, ஆகஸ்ட் 1, 2023க்குள் அனைத்துப் படிப்புகளுக்கான (யு.ஜி மற்றும் பி.ஜி) கல்வி அமர்வைத் தொடங்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
கடந்த ஆண்டு மாணவர்கள் சந்தித்த தொழில்நுட்பக் கோளாறுகளை மனதில் வைத்து, இந்த முறை நாடு முழுவதும் கிட்டத்தட்ட 1000 தேர்வு மையங்களை யு.ஜி.சி அமைத்துள்ளது, அதில் ஒவ்வொரு தேர்வு நாளிலும் 450-500 மையங்கள் பயன்படுத்தப்படும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil