/tamil-ie/media/media_files/uploads/2019/09/Sengottaiyan-1.jpg)
பள்ளிகளில் பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தை போதிக்கும் வகையில் வகுப்புகள் நடத்த நடவடிக்கை எடுத்து வருவதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
தலைமைச்செயலகத்தில், பத்திரிகையாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன் கூறியதாவது, நாட்டிலேயே பள்ளிக்கல்வியில் சிறந்த மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. விடுமுறை நாட்களின் போது நமது பாரம்பரியம் மற்றும் கலாச்சாரம் குறித்து மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் எடுக்கப்படும். அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் விடுமுறை நாட்களின் போது, ஒய்வு பெற்ற ஆசிரியர்களைக் கொண்டு மாணவர்களுக்கு பாரம்பரியம், கலாச்சார வகுப்புகள் எடுக்கப்படும் .
தகவல் தொழில்நுட்பம் மூலம் நவீன சாதனங்களின் உதவியை கொண்டு, மாணவர்களுக்கு புரியும் எளிய முறையில் பாடம் கற்பிக்கும் திட்டம் விரைவில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை அமல்படுத்தப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us