Advertisment

இணைய பாதுகாப்பு வேலை வாய்ப்பு 81 சதவீதம் உயர்வு: முதல் இடத்தில் பெங்களூரு

பெங்களூருக்கு அடுத்தபடியாக டெல்லி-என்சிஆர் 7.95 சதவீதம், மும்பை 6.44 சதவீதம், புனே 5.88 சதவீதம், சென்னை 5.26 சதவீதம் மற்றும் ஹைதராபாத் 4.95 சதவீதம் உள்ளன.

author-image
WebDesk
New Update
Jobs women

செப்டம்பர் 2022 முதல் செப்டம்பர் 2023 வரை வேலை வாய்ப்புகளில் 25.7 சதவீதம் சரிவு ஏற்பட்டுள்ளது.

இந்தியாவில் சைபர் செக்யூரிட்டி வேலை சந்தை தரவுகளை இன்டீடு (Indeed) வெளியிட்டுள்ளது. அதில், 2019 முதல் 2022 வரை, சைபர் செக்யூரிட்டி வேலை வாய்ப்புகள் 81 சதவீதம் அதிகரித்துள்ளன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், செப்டம்பர் 2022 முதல் செப்டம்பர் 2023 வரை வேலை வாய்ப்புகளில் 25.7 சதவீதம் சரிவு ஏற்பட்டுள்ளது. எனினும், இது பாதிப்பை ஏற்படுத்தவில்லை. அதே காலக்கட்டத்தில் வேலைக்கான கிளிக்குகள் 6 சதவீதம் அதிகரித்துள்ளன.

Advertisment

பிராந்தியத்தைப் பொறுத்தவரை, நாட்டின் முதன்மையான தகவல் தொழில்நுட்ப மையமாக பெங்களூரு திகழ்கிறது. இது, இணையப் பாதுகாப்பு வேலைகளில் 23.11 சதவீதம் பங்கை கொண்டுள்ளது.

பெங்களூருக்கு அடுத்தபடியாக டெல்லி-என்சிஆர் 7.95 சதவீதம், மும்பை 6.44 சதவீதம், புனே 5.88 சதவீதம், சென்னை 5.26 சதவீதம் மற்றும் ஹைதராபாத் 4.95 சதவீதம் உள்ளன.

ஆங்கிலத்தில் வாசிக்க : Cybersecurity jobs increased 81% from 2019 to 2022: Indeed

இது குறித்து இன்டீடு இந்திய விற்பனைத் தலைவர் சஷி குமார், “வேலைகளில் தற்போது ஏற்பட்டுள்ள சரிவு ஒரு நிலையற்றதாகும். சைபர் செக்யூரிட்டி துறையானது தொழில்நுட்ப முன்னேற்றத்தின் ஒரு மூலக்கல்லாக உள்ளது. எதிர்காலம் மிகப்பெரிய ஆற்றலைக் கொண்டுள்ளது என்பதை எங்கள் தரவு வலுப்படுத்துகிறது” என்றார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Jobs
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment