Advertisment

2022-ம் ஆண்டின் டாப் ஆன்லைன் கோர்ஸ்களின் பட்டியல்

பைதான் அடிப்படைகள், தரவு பகுப்பாய்வு, ஊட்டச்சத்து, கொரிய மொழி, நாய்களின் உணர்ச்சி மற்றும் அறிவாற்றல் மற்றும் பல... 2022 இன் சிறந்த ஆன்லைன் படிப்புகளின் பட்டியல் இங்கே

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
2022-ம் ஆண்டின் டாப் ஆன்லைன் கோர்ஸ்களின் பட்டியல்

புதிய நுழைவுத் தேர்வு அறிமுகம் மற்றும் அதில் இருந்த தொழில்நுட்பக் கோளாறுகள் போன்றவற்றிலிருந்து, கோவிட்-க்கு முந்தைய நிலைக்கு மாறுவது வரை, 2022 கல்வித் துறைக்கு ஒரு சுவாரஸ்யமான மற்றும் ஏற்றத்தாழ்வுகள் இருந்த ஆண்டாக இருந்தது. 2022 இன் சிறந்த படிப்புகள் முக்கியமாக தொழில்நுட்பத் துறையுடன் தொடர்புடையவை. உடெமி (Udemy) நிறுவனத்தால் ஆய்வு செய்யப்பட்ட தரவுகளின்படி, 2022 ஆம் ஆண்டில் தொழில்நுட்ப திறன்களைக் கற்க செலவழித்த நேரமானது வருடத்திற்கு 49 சதவீதம் அதிகரித்துள்ளது.

Advertisment

எல்லா வழிகளிலும் தொழில்நுட்பம்

Coursera ஆல் பகுப்பாய்வு செய்யப்பட்ட தரவுகளின்படி, 2022 இல் மிகவும் பிரபலமான படிப்புகள் கூகுள் (Google) வழங்கும் அடித்தள மட்டத்தில் தரவு தொடர்பான படிப்புகள் ஆகும். இந்த படிப்புகளுக்கான தேவை 2022ல் 45 சதவீதம் அதிகரித்துள்ளது.

இதையும் படியுங்கள்: வின்ஃபியூச்சர் பரிசு வென்ற சென்னை ஐ.ஐ.டி பேராசிரியர்; மலிவு விலை நீர் சுத்திகரிப்பு சாதனம் உருவாக்கியதற்காக விருது

அதிகம் கற்றுக்கொள்ளப்படும் தொழில்நுட்ப திறன்களில், அமேசான் வெப் சர்வீசஸ் (AWS) தொடர்பான தலைப்புகளுடன் கிளவுட் கம்ப்யூட்டிங் திறன்கள் முதன்மையாக கவனம் செலுத்துகின்றன. தரவு பகுப்பாய்வு மற்றும் பாதுகாப்பிற்கான திறன்கள் மற்றும் தீர்வுகள் வளர்ந்து வரும் தொழில்நுட்ப திறன்களில் உயர்ந்த இடத்தைப் பிடித்துள்ளன, என Udemy இன் அறிக்கை வெளிப்படுத்தியது.

உடெமியின் கூற்றுப்படி, டேட்டாபிரிக்ஸ் படிப்புகளுக்கான தேவையும் 2161 சதவீதம் அதிகரித்துள்ளது. இதேபோல், சிஸ்டம் டிசைன் படிப்புகள் 1012 சதவீதம் அதிகரித்துள்ளன, அதைத் தொடர்ந்து 5 ஜி தொடர்பான படிப்புகள் 643 சதவீதம் அதிகரித்துள்ளது. "தொழில்நுட்ப திறன்கள் புதிய தொழில்களின் அதிகரிப்புக்கு வழிவகுக்கும், அத்துடன் ஏற்கனவே உள்ள வணிகங்களை பாதிக்கும் மற்றும் நாம் செய்யும் விதத்தை மாற்றும்" என்று Udemy இன் இந்தியா மற்றும் ஆசிய-பசிபிக் பிராந்தியத்திற்கான நிர்வாக இயக்குனர் இர்வின் ஆனந்த் கூறினார். மேலும் "வணிக நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களை எதிர்காலத்திற்கு தயார்படுத்துவதற்கு, நெகிழ்வான மற்றும் பயனுள்ள திறன் மேம்பாட்டின் புதிய அலைக்கு மாற்றியமைக்க வேண்டும்," என்றும் அவர் கூறினார்.

மிச்சிகன் பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டமான ‘அனைவருக்கும் புரோகிராமிங் (பைத்தானுடன் தொடங்குதல்)’ 104,000 பதிவுகளைக் கண்டது, இது கடந்த ஆண்டை விட 14 சதவீதம் அதிகமாகும். இதேபோல், பைத்தானில் கூகுளின் க்ராஷ் கோர்ஸ் Coursera இல் 98 சதவீதம் அதிகரித்துள்ளது. ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகம் இயந்திரக் கற்றல் (மெசின் லேர்னிங்) படிப்பை ஆண்டு நடுப்பகுதியில் நிபுணத்துவமாக மாற்றியிருந்தாலும், பாடநெறி 90,000 க்கும் மேற்பட்ட பதிவுகளைக் கண்டது மற்றும் 2022 இல் ஆண்டின் மிகவும் பிரபலமான படிப்புகளில் ஒன்றாக உருவானது.

தொழில்நுட்பப் படிப்புகளைத் தவிர, Google வழங்கும் திட்ட மேலாண்மையின் அடித்தள படிப்புகளும் நல்ல எண்ணிக்கையிலான பதிவுகளைக் கண்டன, மேலும் 2022 இன் முதல் 5 படிப்புகளில் ஒன்றாகவும் மாறியது.

மென்மையான (சாஃப்ட்) திறன்கள் சமமாக முக்கியம்

கார்ப்பரேட் உலகில் ஒரு பணியாளருக்குத் தேவையான தொழில்நுட்பத் திறன்கள் என்ற காலம் போய்விட்டது. இந்த நாட்களில், ஊழியர்கள் மென்மையான திறன்களைப் பெறுவதற்கும் மேம்படுத்துவதற்கும் உந்துதல் பெறுகிறார்கள். தனிப்பட்ட திறன்களைப் பொறுத்தவரை, ஊழியர்கள் உலகளாவிய தலைமை மற்றும் பணியிட நெகிழ்ச்சிக்காக கற்றுக் கொள்கிறார்கள். பல சிறந்த தனிப்பட்ட வளர்ச்சி திறன்கள், மன அழுத்தங்களை சிறப்பாக நிர்வகிக்க ஊழியர்களுக்கு உதவுகிறது. பணியாளர்கள் மத்தியில் பிரபலமடைந்த சிறந்த மென்மையான/ தனிப்பட்ட திறன்கள் தொடர்பான படிப்புகள்:

உணர்வு (825 சதவீதம் அதிகரித்துள்ளது)

சுயமரியாதை (105 சதவீதம் அதிகரித்துள்ளது)

வளர்ச்சி மனப்பான்மை (82 சதவீதம் அதிகரித்துள்ளது.

ஆஃப்-பீட் (ஆர்வம் குறைந்து வரும்) படிப்புகள்

தொழில்நுட்பம், சட்டம், மேலாண்மை படிப்புகளில் இருந்து விலகிச் செல்ல கல்வித்துறை முயற்சிக்கிறது. விலங்கு ஆரோக்கியம், ஊட்டச்சத்து, இசை மற்றும் கலைகள் மற்றும் சுற்றுச்சூழல் மற்றும் நிலைத்தன்மை போன்ற பல வழக்கத்திற்கு மாறான படிப்புகளில் மாணவர்கள் அதிகளவில் ஆர்வம் காட்டுகின்றனர்.

publive-image

உடெமியின் தரவுகள் கொரிய மொழியில் படிப்புகள் இந்தியாவில் பெருகிய முறையில் பிரபலமடைந்து வருகின்றன என்பதை வெளிப்படுத்தியது. கொரிய மொழிப் பாடமானது 2021 இல் பதிவு செய்யப்பட்டதை விட 2022 இல் 175 சதவிகிதம் அதிகரித்துள்ளது. சுவாரஸ்யமாக, இந்த ஆண்டு 88 சதவிகித பதிவு அதிகரிப்புடன் உளவியல் சார்ந்த படிப்புகளும் பிரபலமடைந்துள்ளன என்று உடெமி பகுப்பாய்வு செய்துள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Education Online Courses
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment