Advertisment

ட்ரென்ட் மாறும் வெளிநாட்டு படிப்புகள்... இந்திய மாணவர்கள் தேடி செல்லும் 2 சிறப்பு கோர்ஸ் எவை?

வெளிநாட்டில் கல்வி பயில விரும்பும் மாணவர்கள், சிறப்பு படிப்புகளை தேர்ந்தெடுப்பது அதிகரித்து வருகிறது. எம்பிஏ, எம்எஸ்சி டேட்டா சயின்ஸ் மற்றும் கம்ப்யூட்டர் சயின்ஸ் போன்ற பிரபலமான படிப்புகளை இந்திய மாணவர்கள் விரும்புவதாக லீப் ஸ்காலரின் தரவு காட்டுகிறது.

author-image
WebDesk
New Update
ட்ரென்ட் மாறும் வெளிநாட்டு படிப்புகள்... இந்திய மாணவர்கள் தேடி செல்லும் 2 சிறப்பு கோர்ஸ் எவை?

வெளிநாட்டில் படிக்க விரும்பும் இந்திய மாணவர்களில் 52 சதவீதம் பேர், பிரபல பல்கலைக்கழகத்தை தேர்ந்தெடுப்பது காட்டிலும் சிறப்புப் படிப்புகளை செலக்ட் செய்து படிக்கவே விரும்புவதாக வெஸ்டர்ன் யூனியன் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

Advertisment

சிறப்புப் படிப்புகள் ஹிட் அடித்துள்ளன

காலேஜ் டெகோவின் CBO, தருண் அகர்வால் கூறுகையில், " வெளிநாட்டில் பட்டப்படிப்பைத் தொடர கணிசமான பணம் தேவைப்படுவதால், பெரும்பாலான மாணவர்களின் முக்கிய கவலை முதலீட்டுத் தொகை திரும்பு கிடைத்தல் ஆகும்.

இன்ஜினியரிங், மேனேஜ்மென்ட், கம்ப்யூட்டர் சயின்ஸ், சட்டம், டிசைன் மற்றும் ஹாஸ்பிடாலிட்டி போன்ற லாபகரமான வேலைகளை வெளிநாட்டில் படிக்க பெரும்பாலும் மாணவர்கள் ஆசைப்படுவார்கள்.

ஆனால், சமீப காலமாக டேட்டா சயின்ஸ், பிசினஸ் அனலிட்டிக்ஸ், ஃபின்டெக் போன்ற படிப்புகள் பக்கம் மாணவர்கள் கவனம் திரும்பியுள்ளதை காண முடிகிறது. மேலும், ஹெல்த் இன்ஃபர்மேடிக்ஸ் மற்றும் இன்ஜினியரிங் மேனேஜ்மென்ட் போன்ற காம்பினேஷன் படிப்புகளும் மாணவர்களுக்கான பிரபலமான தேர்வுகளாக உள்ளது என்றார்.

எம்பிஏ, எம்எஸ்சி டேட்டா சயின்ஸ் மற்றும் கம்ப்யூட்டர் சயின்ஸ் போன்ற பிரபலமான படிப்புகளை இந்திய மாணவர்கள் விரும்புவதாக லீப் ஸ்காலரின் தரவு காட்டுகிறது.

MPOWER பைனான்சிங் நிறுவனத்தின் இணை இயக்குநர் சாஷா ரமணி கூறியதாவது, "அமெரிக்காவில் சர்வதேச மாணவர்களுக்கு எம்பிஏ எப்போதுமே பிரபலமான பட்டமாக இருந்தாலும், நிதி, பகுப்பாய்வு மற்றும் மேலாண்மை போன்ற MBA-ஐ ஒட்டிய பாடங்களை மாணவர்கள் அதிகளவில் தேர்வு செய்கின்றனர். இவை, அதிக தொழில் நிலைத்தன்மையை வழங்குவதோடு மட்டுமல்லாமல், பட்டப்படிப்புக்குப் பிறகு அமெரிக்காவில் குடியேற பலன்களையும் வழங்குகின்றன.

MBA-ஐ ஒட்டிய STEM பட்டங்கள் குறிப்பாக பெண்களிடையே பிரபலமாக உள்ளன. உயர்நிலைப் பள்ளிகள் கூட அவற்றை அனைவருக்கும் கிடைப்பதற்கான ஏற்பாடுகளை செய்கின்றன. உதாரணமாக, யேல் பல்கலைக்கழகம், சமீபத்தில் அதன் பொருளாதாரப் பட்டத்தை Econometric மற்றும் Quantitative Economics என மறுபெயரிட்டது. அதனால் மாணவர்கள் STEM அங்கீகாரத்தைப் பெற முடியும் என்றார்.

வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் பிரபலமான படிப்புகள்

வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள தரவுகளின்படி, ஜனவரி 2021 நிலவரப்படி, மொத்தம் 11 லட்சத்து 33 ஆயிரத்து 749 இந்திய மாணவர்கள் 99 வெளிநாடுகளில் கல்வி பயிலுகின்றனர்.

இவற்றில், வெளிநாட்டு படிப்புகளுக்கு ஐக்கிய அரபு அமீரகம், கனடா, ஆஸ்திரேலியா, சீனா ஆகியவை இந்திய மாணவர்கள் தேர்ந்தெடுக்கும் முதன்மையான இடங்களாகும்.

IDP கல்வியின் பிராந்திய இயக்குநர் (தெற்காசியா) பியூஷ் குமார் கூறுகையில், " மாணவர்கள் ஒரு நாட்டில் அல்லது அவர்கள் படிக்கத் தேர்ந்தெடுக்கும் பல்கலைக்கழகத்தில் கிடைக்கும் சிறந்த சிறப்புப் படிப்புகளைத் தேர்வு செய்கிறார்கள்.

கனடாவில் வணிகம் மற்றும் நிதியியல், கணினி அறிவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பம், பொறியியல், சுகாதாரம் மற்றும் மருத்துவம் மற்றும் ஊடகம் ஆகியவற்றில் சிறந்த படிப்புகளை வழங்குவதற்கு அறியப்பட்ட உலகின் மிக பிரீமியம் பல்கலைக்கழகங்கள் உள்ளன.

ணிகம், பொறியியல் மற்றும் தொழில்நுட்பம், இயற்கை அறிவியல், மருத்துவம், சட்டம், சமூக அறிவியல், விளையாட்டு அறிவியல், ஊடகம் மற்றும் தகவல் தொடர்பு, படைப்புக் கலைகள், காட்சிக் கலைகள், நிகழ்த்துக் கலைகள் மற்றும் விருந்தோம்பல் மற்றும் சுற்றுலா ஆகியவற்றுடன் தொடர்புடைய படிப்புகளைப் படிக்க பல மாணவர்கள் இங்கிலாந்து நாட்டை தேர்வு செய்கின்றனர்.

மேலும், பல மாணவர்கள் மருத்துவம், மருத்துவ அறிவியல், பொறியியல் மற்றும் வணிக மேலாண்மை துறையில் பயில் அயர்லாந்தை விருப்பமான தேர்வாக கருதுகின்றனர் என்றார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Education News
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment