டி.டி தமிழ் தொலைக்காட்சியில் பணியாற்ற சூப்பர் வாய்ப்பு; தகுதி இதுதான்; உடனே அப்ளை பண்ணுங்க!

டி.டி தமிழ் தொலைக்காட்சி வேலை வாய்ப்பு; டிகிரி படித்தவர்கள் பல்வேறு பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்; தேர்வு முறை இதுதான்!

டி.டி தமிழ் தொலைக்காட்சி வேலை வாய்ப்பு; டிகிரி படித்தவர்கள் பல்வேறு பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்; தேர்வு முறை இதுதான்!

author-image
WebDesk
New Update
dd tamil

சென்னையில் செயல்பட்டு வரும் பிரசார் பாரதி டி.டி தமிழ் தொலைக்காட்சி செய்தி பிரிவில் பல்வேறு பணியிடங்களை நிரப்ப வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணியிடங்கள் தற்காலிக நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 24.07.2025க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள். 

Advertisment

Tamil News Readers/ anchors

கல்வித் தகுதி: இளங்கலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். தமிழ் தெரிந்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி: 21 வயது முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.

Advertisment
Advertisements

News Reports (Tamil, English, Hindi)

கல்வித் தகுதி: இளங்கலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். இதழியலில் டிகிரி அல்லது டிப்ளமோ பெற்றிருக்க வேண்டும். 3 ஆண்டுகள் பணி அனுபவம் அவசியம்.

வயதுத் தகுதி: 21 வயது முதல் 50 வயதிற்குள் இருக்க வேண்டும்.

Editorial Assistants

கல்வித் தகுதி: இளங்கலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். இதழியலில் டிகிரி அல்லது டிப்ளமோ பெற்றிருக்க வேண்டும். 3 ஆண்டுகள் பணி அனுபவம் அவசியம்.

வயதுத் தகுதி: 25 வயது முதல் 50 வயதிற்குள் இருக்க வேண்டும்.

Copy Editors 

கல்வித் தகுதி: இளங்கலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். இதழியலில் டிகிரி அல்லது டிப்ளமோ பெற்றிருக்க வேண்டும். 3 ஆண்டுகள் பணி அனுபவம் அவசியம்.

வயதுத் தகுதி: 21 வயது முதல் 50 வயதிற்குள் இருக்க வேண்டும்.

Broadcast Assistants

கல்வித் தகுதி: இளங்கலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். Degree/ Diploma in TV & Radio production படித்திருக்க வேண்டும். 

வயதுத் தகுதி: 21 வயது முதல் 50 வயதிற்குள் இருக்க வேண்டும்.

Production Assistants

கல்வித் தகுதி: இளங்கலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். Degree/ Diploma in Film and Video Editing படித்திருக்க வேண்டும். ஒரு ஆண்டு பணி அனுபவம் அவசியம்.

வயதுத் தகுதி: 21 வயது முதல் 50 வயதிற்குள் இருக்க வேண்டும்.

Post Production Assistants

கல்வித் தகுதி: இளங்கலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். Degree/ Diploma in Film and Video Editing படித்திருக்க வேண்டும். 3 ஆண்டுகள் பணி அனுபவம் அவசியம்.

வயதுத் தகுதி: 25 வயது முதல் 50 வயதிற்குள் இருக்க வேண்டும்.

Camera Persons

கல்வித் தகுதி: 12 ஆம் வகுப்பு படித்திருக்க வேண்டும். Degree/ Diploma in Cinematography/ Videography படித்திருக்க வேண்டும். ஒரு ஆண்டு பணி அனுபவம் அவசியம்.

வயதுத் தகுதி: 25 வயது முதல் 50 வயதிற்குள் இருக்க வேண்டும்.

Camera Assistants

Co Artists

கல்வித் தகுதி: 12 ஆம் வகுப்பு படித்திருக்க வேண்டும். கணினி அறிவு அவசியம். ஒரு ஆண்டு பணி அனுபவம் அவசியம்.

வயதுத் தகுதி: 21 வயது முதல் 50 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க டி.டி சமூக வலைதளப் பக்கங்களில் கொடுப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். 

மின்னஞ்சல் முகவரி: careerddtamilnews@gmail.com 

விண்ணப்பிக்க கடைசி தேதி: 24.07.2025

இந்த வேலை வாய்ப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய கீழே கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பைப் பார்வையிடவும்.

Chennai Jobs

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: