சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு பொது தேர்வு ரத்து? அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில்
CBSE 12 Board Exam announcement : மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (CBSE) 12 ஆம் வகுப்புகளுக்கு எஞ்சியுள்ள தேர்வுகளை ரத்து செய்யப்படுமா? திட்டமுட்டப்படி நடைபெறுமா? என்பது குறித்த முடிவை இன்றைக்குள் எடுக்கப்படலாம்
CBSE 12 Board Exam announcement : மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (CBSE) 12 ஆம் வகுப்புகளுக்கு எஞ்சியுள்ள தேர்வுகளை ரத்து செய்யப்படுமா? திட்டமுட்டப்படி நடைபெறுமா? என்பது குறித்த முடிவை இன்றைக்குள் எடுக்கப்படலாம்
CBSE 12 Exam Announcement: மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (CBSE) 12 ஆம் வகுப்புகளுக்கு எஞ்சியுள்ள தேர்வுகளை ரத்து செய்யப்படுமா? திட்டமுட்டப்படி நடைபெறுமா? என்பது குறித்த முடிவை வியாழக்கிழமைக்குள் எடுக்கப்படலாம் என்று உச்ச நீதிமன்றத்திடம் மத்திய அரசு சார்பாக ஆஜாரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா தெரிவித்தார்.
Advertisment
எனவே, 12 ஆம் வகுப்புகளுக்கு எஞ்சியுள்ள தேர்வுகள் ரத்து செய்யப்படுகிறதா? இல்லையா? என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சிபிஎஸ்இ 12 வகுப்பு பொதுத் தேர்வு தொடர்பான விவாதங்கள் இறுதி கட்டத்தை அடைந்து விட்டதாகவும, மாணவர்களின் மனநிலையை கருத்தில் கொண்டு, விரைவில் இது குறித்த முடிவு அறிவிக்கப்படும் என்று நீதிபதிகள் ஏ.எம் கான்வில்கர், தினேஷ் மகேஸ்வரி, சஞ்சீவ் கன்னா ஆகியோர் அடங்கிய அமர்வில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா தெரிவித்தார்.
இதனிடையே, கொரோனா பெருந்தொற்று காரணமாக இந்திய பள்ளிச் சான்றிதழ் தோ்வுகள் கவுன்சில் சார்பில் செயல்பட்டு வரும் ஐசிஎஸ்இ வாரியத் தேர்வுகளை ரத்து செய்ய கோரும் மனுவையும் உச்சநீதிமன்ற அமர்வு விசாரித்தது.
Advertisment
Advertisements
சிபிஎஸ்இ தேர்வுகள் தொடர்பான அரசாங்கத்தின் முடிவை ஐசிஎஸ்இ வாரியம் பின்பற்றும் என்று அதன் சார்பாக வாதாடிய வழக்கறிஞர் தெரிவித்தார்.
சுயாதீன முடிவுகளை எடுக்க ஐசிஎஸ்இ வாரியத்திற்கு முழு சுதந்திரம் உள்ளதாக நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும், சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் தொடர்பான உத்தரவுகள் ஐசிஎஸ்இ வாரியத்திற்கு பொருந்தாது என்றும் நீதிபதிகள் தெளிவுபடுத்தினர்.
இந்த விவகாரம் மீண்டும் ஜூன் 25 ம் தேதி விசாரணைக்கு வருகிறது.
ஜூலை 1 முதல் 15 ஆம் தேதிக்குள் 12 ஆம் வகுப்புகளுக்கான தேர்வுகள் வடகிழக்கு டெல்லி உள்பட நாடு முழுக்க நடைபெறும் என்று மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் நிஷாங்க் தெரிவித்தார்.
கொரோனா பெருந்தொற்று நிலைமையைக் கருத்தில் கொண்டு, ஜூலை 1 முதல் ஜூலை 15 வரை நடைபெறவிருந்த 12ம் வகுப்புகளுக்கு வகுப்புகளுக்கு எஞ்சியுள்ள தேர்வை ரத்து செய்யுமாறு பெற்றோர்கள் கடந்த வாரம் உச்ச நீதிமன்றத்தை மனுத்தாக்கல் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil