/indian-express-tamil/media/media_files/DCPiEgd9srxP0rsY5TFZ.jpg)
முக்கிய ஐடி நிறுவனமான எச்.சி.எல் நிறுவனத்தில் டிகிரி முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு தொடர்பான அறிவிப்பு வெளியாகி உள்ளது.
மதுரை எச்.சி.எல் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடத்தை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. தற்போது வெளியாகி உள்ள அறிவிப்பின்படி மதுரை எச்.சி.எல் நிறுவனத்தில் கிராசூவேட் டிரெய்னி ( graduate trainee) பணியிடங்கள் நிரப்பட்ட உள்ளது.
இந்த பணிக்கு டிகிரி முடிந்திருந்தால், விண்ணப்பம் செய்யலாம். அதாவது மத்திய, மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி, பல்கலைக்கழகங்களில் பி.சி.ஏ அல்லது பி.எஸ்.சி டிகிரியை 2024ம் ஆண்டில் முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம். இதன்மூலம் பணி அனுபவம் என்பது தேவையில்லை. இந்த டிகிரியை 60 % மதிப்பெண்களுடன் விண்ணப்பத்தாரர்கள் முடிந்திருந்தால் மட்டுமே விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் இந்த அறிவிப்பில் இன்னொரு முக்கிய விஷயமும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது பணிக்கு தேர்வாகும் நபர்கள் 12 மாத அக்ரிமெண்ட்டில் பணியாற்ற வேண்டும். ஒருவேளை பணிக்கு தேர்வாகி முதல் 12 மாதத்துக்குள் வேலையை விட்டால் அவர்கள் எச்.சி.எல் நிறுவனத்துக்கு ரூ.50 ஆயிரம் செலுத்த வேண்டியிருக்கும்.
இந்த பணிக்கு தேர்வாகும் நபர்கள் தமிழகத்தில் மதுரையில் பணியமர்த்தப்படுவார்கள். இதுதவிர மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் மற்றும் உத்தர பிரதேச மாநிலத்தின் லக்னோவிலும் பணி நியமனம் செய்யப்படலாம்.
பணி என்பது குளோபல் டஸ்க் சர்வீஸ், கிளைண்ட் பேசிங் ரோல் என்பதாகும். தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக எச்.சி.எல் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் சென்று விண்ணப்பம் செய்யலாம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.