நாட்டின் பல ஐ.ஐ.டி உயர்க்கல்வி நிலைய வளாகத்திற்குள் இயங்கும் தனியார் பள்ளிகளை, கேந்தியா வித்யாலயா பள்ளிகளாக மாற்ற வேண்டும் என்று தாக்கல் செய்யப்பட்ட மனு மீது நடவடிக்கை எடுக்கு வேண்டும் என்று டெல்லி உயர்நீதிமன்றம் மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2016ம் ஆண்டு ஜூலை மாதம் , ஐஐடி வளாகத்திற்கு இயங்கும் தனியார் பள்ளிகளை படிப்படியாக குறைத்து, அனைத்து பள்ளிகளையும் கேந்திரியா வித்யாலயா மாற்றுவதற்கான அறிவிப்பை மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டிருந்தது.
ஆனால், இந்த அறிவிப்பு நடைமுறைபடுத்தப்படாமல் இருப்பதால், ஐ.ஐ.டி மண்டியின் முன்னாள் ஊழியரும், சமூக ஆர்வலருமான சுஜீத் சுவாமி டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்திருந்தார் .
சுஜீத் சுவாமி
சுஜீத் சுவாமி தனது மனுவில், தனியார் அல்லது தனியார் பங்களிப்போடு உருவாக்கப்பட்ட பள்ளிகளால் ஐஐடி கருவூலத்திற்கு ஏற்பட்ட உண்மையான இழப்பை மதிப்பீடு செய்ய வேண்டும்.
தனியார் பள்ளிகளை தங்கள் வளாகங்களைப் பயன்படுத்த அனுமதித்ததற்காக ,சம்பந்தப்பட்ட ஐ.ஐ.டி.களிடமிருந்து வணிக சந்தை விகிதங்களில் வருவாய் இழப்பை வசூலிக்கப்படவேண்டும் என்றும் கோரியுள்ளார்.