அமெரிக்காவைச் சேர்ந்த கணினி தயாரிப்பு நிறுவனமான டெல், அதன் சேல்ஸ் பிரிவில் இருந்து 12,500 ஊழியர்களை பணிநீக்கம் செய்த சம்பவம் ஐ.டி துறையினர் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. செயற்கை நுண்ணறிவு மற்றும் நவீன தொழில்நுட்பத்தில் முதலீடு செய்துள்ளதால் இந்த முடிவு என விளக்கமளித்துள்ளது.
டெல் நிறுவனம் கடந்தாண்டு சுமார் 13,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த நிலையில், இரண்டாவது முறையாக இந்த ஆண்டு 12,500 ஊழியர்களை பணிநீக்கம் செய்திருக்கிறது. ப்ளூம்பெர்க் செய்திநிறுவனத்தின்படி, டெல் நிர்வாகிகள் பணிநீக்கங்களை இன்னும் வெளிக்கப்படையாக அறிவிக்கவில்லை என்றும், எத்தனை ஊழியர்கள் தங்கள் வேலையை இழப்பார்கள் என்பதை அந்த நிறுவனம் உறுதிப்படுத்தவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளது.
ஆங்கிலத்தில் படிக்கவும்: Dell makes job cuts as big tech layoffs continue in 2024
ஆனால் சிலிக்கான் ஆங்கிளில் இருந்து வெளிவந்துள்ள அறிக்கையின்படி, பெயரை வெளியிட விரும்பாத ஒரு நிர்வாகி இதுகுறித்து பேசுகையில், 'இந்த எண்ணிக்கையை சுமார் 12,500 என மதிப்பிடுகிறது என்று கூறியுள்ளார். இது பற்றி பேசிய லேஆஃப் டிராக்கர் அதே எண்ணிக்கையிலான ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்படலாம் என்றும் கூறியுள்ளார்.
பிப்ரவரி வரை, டெல் சுமார் 1,20,000 பணியாளர்களைக் கொண்டிருந்தது. சமீபத்திய அறிக்கையின் எண்ணிக்கை துல்லியமாக இருந்தால், இந்த வார பணிநீக்கங்கள் சுமார் 10 சதவீத பணியாளர்களாக இருக்கும்.
டெல் கடந்த நிதியாண்டில் இருந்து பணிநீக்கங்களின் தொடர்ச்சியாகும். இதன் போது 13,000 ஊழியர்கள் வேலை இழந்துள்ளனர். ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் ஒரே தொழில்நுட்ப நிறுவனம் டெல் அல்ல. கடந்த வாரம், இன்டெல் இந்த ஆண்டு 15,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் திட்டங்களை அறிவித்தது. இந்த பணி நீக்கங்கள் கடந்த ஆண்டு தொடங்கி இந்த ஆண்டு வரை தொழில்நுட்ப துறையில் பேரிடியாக இருந்து வருகிறது. இதன் காரணமாக ஐ.டி ஊழியர்கள் பலரும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“