எம்பிபிஎஸ் மட்டுமல்ல... நீட் வெற்றிக்கு பிறகு உங்களுக்கு இத்தனை வாய்ப்புகள்!

நீட் தேர்வில் வெற்றிபெற்று எம்.பி.பி.எஸ்ஸில் இடங்களைப் பெறமுடியாத/விருப்பமில்லாத மாணவர்கள்,பல் மருத்துவம், ஆயுஷ் மற்றும் கால்நடை அறிவியல் பாடங்களை தேர்வு செய்யலாம்.

இதில்,எது வாழ்க்கைக்கு அதிக பலனளிக்கும் என்பதை தீர்மானிப்பது சற்று கடினம் . இந்த முக்கியமான கேள்விக்கு நிபுணர்களுடன் பேசிய பிறகு, indianexpress.com இந்த கட்டுரையில் பதிலளிக்க முயற்சிக்கிறது.

மைண்ட்லர் நிறுவனத்தின் பயிற்சியாளரான சுவாதி அகர்வால், “உயிரியல் தொடர்பான கருத்துக்களைக் கற்க விரும்புவோர், இரண்டையும் கருத்தில் கொள்ள வேண்டும்.” என தெரிவித்தார்.

செல்லப்பிராணிகளை நேசிப்பதன் காரணமாக நகர்ப்புறங்களில் கால்நடை அறிவியல் துறையில் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. இத்துறையில் பெரும்பாலான அரசு பணியிடங்கள் கிராமப்புறங்களில் உள்ளன.

இதற்கிடையில்,பிடிஎஸ் நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறங்களிலும் பிரபலமாகி வருகிறது. மருத்துவ பயிற்சியாளர்கள் பலரும் இதை தங்களது சிறந்த விருப்பங்களாக கருதி வருகின்றனர்.

நீங்கள் கிராமப்புறங்களுக்கு செல்ல முடியுமா?

வித்யா மந்திர் பயற்சி மைய இயக்குநர் சவுரவ் குமார், தெரிவிக்கையில்,”இருப்பிடங்களைப் பெரிதாக நினைப்பவர்களுக்கு பல் மருத்துவம் ஒரு சிறந்த வழி என்று கூறலாம். கிராமப்புறங்களில் கால்நடை வளர்ப்பு அதிகம் தேவைப்படுவாதால் அங்கு கால்நடை அறிவியல் பிரபலமானதாக உள்ளது.

நகர்புறங்களில் பெரும்பாலும் செல்லப்பிராணிகளுக்கு சிகிச்சையளிப்பதாக இருக்கும். இது மிகவும் லாபகரமானவை என்று சொல்ல முடியாது. நீங்கள் கிராமப்புறத்திற்கு செல்லத் தயாராக இருந்தால்,அரசாங்க பணிகளில் உருவாகும் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ளலாம்” என்றார்.

ஆங்கிலத்தில் படிக்க: Dental vs veterinary vs AYUSH courses: Options beyond MBBS on clearing NEET

இயற்கை மருத்துவம்,பிசியோதெரபி, ஹோமியோபதி, ஆயுர்வேதம் ஆகியவை மிகவும் பிரபலமடைந்து சர்வதேச அங்கீகாரத்தைப் பெற்று வருவதால் ஆயுஷ் அமைச்சகம் ஒரு நல்ல தேர்வாக இருக்கும். அமைச்சகம் அதிகளவில் நிதி ஒதுக்கி, இந்திய கலாச்சாரமாக ஊக்குவிப்பதால், இந்தத் துறை இன்னும் அதிகமாக வளரும்,” என்றும் தெரிவித்தார்.

அடிப்படை இதுதான்:  அனைத்தும் உங்கள் நேசிப்பை பொருத்தது தான். விலங்கின் மீதான நாட்டம் உங்களிடம் அதிகமாக இருந்தால், நீங்கள்  கால்நடை அறிவியலைத் தேர்வு செய்யலாம்.  ஒரு கால்நடை மருத்துவராக, செல்லப்பிராணிகளை மட்டுமல்ல, பலவகையான விலங்குகளையும் சமாளிக்க வேண்டியிருக்கும். மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் முதல்  வனவிலங்கு மறுவாழ்வு பணியாளர் வரை நீங்கள்  இணைந்து பணியாற்ற வேண்டியிருக்கும்.

பிடிஎஸ் பொறுத்தவரையில் கிளினிக் அமைப்பதைத் தாண்டி பல விஷயங்கள் உள்ளன. “மருத்துவ ஆராய்ச்சி, பீரியண்டோன்டிக்ஸ், வாய்வழி கதிரியக்கவியல் உள்ளிட்ட பகுதிகளில் நிபுணத்துவம் போன்றவைகளை நீங்கள் தேர்வு செய்யலாம். ஊதியமும் நல்ல முறையில் இருக்கும்” என்று தெரிவித்தார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Education-jobs News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close