கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் உள்ள எஸ்.என்.ஆர் கலையரங்கில் (தனியார்)
ஸ்ரீ இராமகிருஷ்ணா பல் மருத்துவ கல்லூரியின் 20-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது.
பட்டமளிப்பு விழாவிற்கு எஸ்.என்.ஆர் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் சுந்தர் தலைமை தாங்கினார். கல்லூரியின் முதல்வர் டாக்டர் தீபானந்தன் வரவேற்புரையாற்றினார்.
தொடர்ந்து 93 மாணவ மாணவியர்களுக்கு இளங்கலை பட்டங்களும் 9 மாணவர்கள் முதுகலை பட்டங்களையும், பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கிய 12 மாணவர்களுக்கு தங்க பதக்கங்களும் வழங்கபட்டது.
முன்னதாக விழா மேடையில் மாணவ மாணவியர்கள் மத்தியில் சிறப்பறையாற்றிய சிறப்பு விருந்தினர் எம்.எஸ்.ஆர் பல் மருத்துவமனையின் முதன்மை மருத்துவர் டாக்டர் பிரகாஷ் கூறியதாவது,
மருத்துவத் துறையை தேர்வு செய்யும் அனைவருக்குமே நல்ல எதிர்காலம் உள்ளது. ஆனால் பொது மருத்துவம் - ஆங்கில மருத்துவம் பயிலும் மருத்துவர்களுக்கு கிடைக்கும் மதிப்பும், மரியாதையும், பல் மருத்துவர்களுக்கு கிடைப்பதில்லை என்ற மாய தோற்றம் இங்கு நிலவுகிறது.
இவற்றை முழுமையாக அகற்ற வேண்டும் பல் மருத்துவமும் ஒரு சிக்கலான துறை தான். முளை முதல் உள்ளங்கால் வரை செல்லும் நரம்புகள் பற்றி முழுமையாக தெரிந்து கொண்டு
எந்த பல்லில் எந்த நரம்புகள் சம்பந்தபட்டது என்பதை தெளிவாக புரிந்து சிகிச்சை அளிக்க வேண்டும்.
ஆனால் வெளியில் பல் மருத்துவர் தானே என்ற மதிப்பு குறைபாடு அனைவரது மத்தியிலும் உள்ளது. பொது மருத்துவத்துறையில் இல்லாத சிக்கல்களையும் பல் மருத்துவர்கள் சந்தித்து சிகிச்சை அளிக்கின்றனர்.
அவர்களுக்கும் உரிய மதிப்பும் மரியாதையும் கிடைக்க வேண்டும் என்றார்.
இந்த பட்டமளிப்பு விழா நிகழ்ச்சியில் ஸ்ரீ இராமகிருஷ்ணா பல் மருத்துவ கல்லூரியின் பேராசிரியர்கள், மாணவ மாணவியர்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தி: பி.ரஹ்மான்