‘வேலைவாய்ப்பு வெள்ளி’: தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம், 8ம் வகுப்பு அடிப்படை தகுதி

தனியார்த்துறை வேலைவாய்ப்பு முகாம் கிண்டி ஆலந்தூர் சாலையில் உள்ள ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெறும்.

private job fair
Private job Mela, Job Fair in chennai, தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்: வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கு பல்வேறு நடவடிக்கைகள் மூலம் வேலைவாய்ப்பு பெற தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிசித்துறை , உதவி செய்து வருகிறது.

தனியார் துறையில் பணியமா்த்தும் நடவடிக்கையாக தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு மாவாட்ட வேலைவாய்ப்பு அலுவகத்தில் வெள்ளிதோறும் சிறிய அளவிலான வேலைவாய்ப்பு முகாமும் மாதம் அல்லது இருமாதத்திற்கு ஒருமுறை மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. வாரந்தோறும் வெள்ளிக்கிழமையானது ‘வேலைவாய்ப்பு வெள்ளி’யாகவும் அனுசரிக்கப்பட்டு வருகிறது.

அதேபோன்று, சென்னையில் உள்ள அனைத்து வேலைவாய்ப்பு அலுவலகங்களும் ஒன்றிணைந்து வரும் பிப்ரவரி 21-ம் தேதி (வெள்ளிகிழமை), மிகப்பெரிய அளவில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமினை நடத்த உள்ளன. 1000க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு பலனளிக்கும் வகையில் இந்த முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த தனியார்த்துறை வேலைவாய்ப்பு முகாம் சென்னை-32 கிண்டி ஆலந்தூர் சாலையில் உள்ள ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை நடக்கிறது.

இம்முகாமில் 35 வயதுக்கு உட்பட்ட 8-ம் வகுப்பு,எஸ்.எஸ்.எல்.சி, பிளஸ் 2, ஐ.டி.ஐ, டிப்ளோமோ, கலை மற்றும் அறிவியல் பிரிவில் ஏதாவது ஒரு பட்டம் (டிகிரி),B.SC/M.SC. Nursing ஆகிய கல்வித் தகுததி உடைய அனைவரும் (மாற்றுத் திறனாளிகள் உட்பட )    அனைவரும்  பங்கேற்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ள விரும்பும் தனியார் துறை வேலையளிப்போர்கள் தங்களுக்கு தேவைப்படும் பணியாளர்களின் விபரத்தினையும், தொழிற் பழகுநர் பயிற்சிக்கு தேவைப்படும் பணியாளர்களின்; விபரத்தினையும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு தொலைபேசி வாயிலாக தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம்: அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் 1978ம் ஆண்டு முதல் செயற்பட்டு வருகிறது. அயல்நாட்டு வேலைவாய்ப்பு தேடும் இளைஞா்களுக்கு இந்நிறுவனம் உதவி செய்து வருகிறது. இது தொடா்பான பதிவுகள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திலும் மேற்கொள்ளப்படுகிறது.
மேலும் விவரங்களுக்கு omcmanpower.com என்ற இணையதளத்தை அணுகலாம்.

Get the latest Tamil news and Educationjobs news here. You can also read all the Educationjobs news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Department of employment and training private job mela on february

Next Story
2015 குரூப் 1 தேர்வு முறைகேடு : திமுக மனுத்தாக்கல் செய்ய அனுமதி
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com