நீட் தேர்வு முடிவுகளுக்காக லட்சக்கணக்கான மாணவர்கள் காத்திருக்கும் நிலையில்,நீட் ஆன்சர் கீ அக்டோபர் 15 ஆம் தேதி வெளியானது. விண்ணப்பதாரர்கள் நீட் ஆன்சர் கீ விடைகள் மீது கேள்விகளை நாளை(அக்டோபர்-17) இரவு 9 மணிக்குள் எழுப்ப தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான கட்டண தொகை 1000 ரூபாயை டெபிட் கார்ட், கிரேடிட் கார்ட், ஆன்லைன் வழியாக செலுத்தலாம். விண்ணப்பதாரர்கள் எழுப்பிய கேள்விகளை என்டிஏ அதிகார்கள் ஆய்வு மேற்கொள்வார்கள்.
அவை சரியாக இருக்கும் பட்சத்தில், பைனல் ஆன்சர் கீயில் அந்த பதில் மாற்றப்படும். பைனல் ஆன்சர் கீ அடிப்படையில் தான், நீட் தேர்வு முடிவுகள் வெளியாகும்.
விண்ணப்பதாரர்கள் என்டிஏ யின் அதிகாரப்பூர்வ தளத்தில் ஆன்சர் கீயை டவுன்லோடு செய்துகொள்ளலாம். அத்துடன் கூடுதலாக, நீட் தேர்வில் மாணவர்களின் விடைத்தாள் நகலை பெற்றுக்கொள்ளலாம்.
நீட் 2021 ஆன்சர் கீ டவுன்லோடு செய்யும் வழிமுறைகள்
step 1: முதலில் என்டிஏ neet.nta.nic.in தளத்திற்கு செல்ல வேண்டும்
step 2: அங்கு ஆன்சர் கீ கிளிக் செய்ய வேண்டும்
step 3: லாகின் செய்வதற்கான தகவல்களை பதிவிட வேண்டும்.
step 4: ஆன்சர் கீ பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
step 5: அதிலிருக்கும் instructions தெளிவாக படித்துவிட்டு, விடை குறித்து கேள்வி எழுப்பலாம்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil